For Quick Alerts
For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரி அருகே எரி சாராயம் கடத்தியவர் கைது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே 500 லிட்டர் எரி சாராயத்தைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட காரைப் போலீசார்பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரிலிருந்து கேரளாவில் உள்ள கோட்டயத்திற்கு எரி சாராயம் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகப்போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில்500 லிட்டர் எரி சாராயம் கடத்தப்பட்டுக் கொண்டிருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து எரி சாராயத்தையும், அந்தக் காரையும் பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கோட்டயாறைச்சேர்ந்த ஒருவரைக் கைது செய்தனர்.


