For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவை தாக்க ஏவுகணைகளை தயார் செய்யும் வட கொரியா

By Staff
Google Oneindia Tamil News

பியோங்யாங்:

ஈராக்குக்கு அடுத்தபடியாக வட கொரியா மீது அமெரிக்கா கண் வைக்கலாம் என்று கருதப்படுவதால் தனது ஏவுகணைகளைதயார் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது வட கொரியா.

கம்யூனிஸ ஆட்சி நடக்கும் வட கொரியாவுக்கும் அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி நடக்கும் தென் கொரியாவுக்கும் இடையேதொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இதனால் தென் கொரியாவுக்கு பாதுகாப்பாக ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைகள்அந் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் இருப்பதை அந் நாட்டு மக்களும் விரும்பவில்லை. வட கொரியாவும்விரும்பவில்லை. ஆனால், தென் கொரிய ஆட்சியாளர்களுக்கு வேறு வழி இல்லாததால் அமெரிக்கப் படைகளை தங்கள்நாட்டில் நிற்க வைத்துள்ளனர்.

ஏவுகணைக் கொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது வட கொரியா. உலகின் எந்தப் பகுதியையும் தாக்கும் சக்தி மிக்கஏவுகணைகள் அந்த நாட்டிடம் உள்ளன. இந் நிலையில் அணு ஆயுத ஆராய்ச்சிகளில் வட கொரியா இறங்கியது. இதையடுத்துஐ.நா. சபையின் சர்வதேச அணு சக்திக் கமிஷன் மூலமாக வட கொரியாவுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா.

மின்சாரம் தயாரிக்கே அணு சக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆயுதம் தயாரிக்க அல்ல என்றும் வட கொரியாகூறியது. இயையடுத்து மின்சாரம் தயாரிக்கத் தேவையான பெட்ரோலிய எரிபொருளை இலவசமாகத் தருவதாகவும் உடனேஅணு ஆராய்ச்சியைக் கைவிடுமாறும் அமெரிக்கா கோரியது.

இதற்கு வட கொரியா இணங்கியது. தனது ஆராய்ச்சிகளையும் நிறுத்தியது. ஆனால், அமெரிக்கா திடீரென தனது பெட்ரோலியசப்ளையை நிறுத்தியது. இதனால் வெறுத்துப் போன வட கொரியா மீண்டும் அணு ஆயுத ஆராச்சிகளை ஆரம்பித்தது.

இதற்குத் தடையாக இருந்த சர்வதேச அணு சக்திக் கமிஷனின் பார்வையாளர்களை நாட்டைவிட்டு விரட்டியடித்தது.

அதிலிருந்து அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான மோதல் முற்ற ஆரம்பித்துள்ளது. கடந்த சில மாதங்களில்இந்தப் பதற்றம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

வட கொரியாவையும் தென் கொரியாவையும் பிரித்து வைக்கவே அமெரிக்கா தனது படைகளை இந்தப் பிராந்தியத்தில் நிறுத்திவைத்திருப்பதாகவும் கொரிய பகுதியில் அமெரிக்காவுக்கு எந்த வேலையும் இல்லை எனவும் வட கொரியா கூறுகிறது.

ஈராக்கைப் போல எளிதாக வட கொரியாவைத் தாக்கவும் முடியாது என்பதால் கையைப் பிசைந்து கொண்டுள்ளது அமெரிக்கா.

ஈராக் விவகாரத்தில் இங்கிலாந்து தவிர உலகின் அனைத்து நாடுகளின் எதிர்ப்பையும் சந்தித்து வரும் அமெரிக்கா வட கொரியவிஷயத்தில் உடனடியாக கடும் நடவடிக்கையில் இறங்க முடியாமல் திணறி வருகிறது.

அமெரிக்காவின் இந்த நிலையை நன்றாக உணர்ந்து கொண்டுள்ள வட கொரியா தொடர்ந்து அந்த நாட்டை சீண்டி வருகிறது.

வட கொரியாவின் அணு ஆயுத ஆராய்ச்சிகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை விவாதித்து வேண்டிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சர்வதேச அணு சக்திக் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

சர்வதேச அணு ஆயுத கட்டுப்பாட்டு விதிகளை வட கொரியா மீறிவிட்டதாக கமிஷன் கூறியுள்ளது. இது தொடர்பாக கமிஷன்நடத்திய ஓட்டெடுப்பில் ரஷ்யாவும் கியூபாவும் வாக்களிக்கவில்லை.

இந் நிலையில், அமெரிக்காவின் நெருக்குதலால் தான் இந்தப் பரிந்துரையை கமிஷன் செய்துள்ளதாக வட கொரியா கூறுகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரும்பினால் வட கொரியா மீது பொருளாதாரத் தடைகளைக் கூட விதிக்க முடியும். ஆனால்,அப்படிச் செய்தால் அது வட கொரியாவை மேலும் தூண்டிவிடும் என ஜப்பான், ரஷ்யா, தென் கொரியா ஆகிய நாடுகள்நினைக்கினறன.

இதனால் வட கொரியாவை மிரட்டுவதை விட்டுவிட்டு அந் நாட்டுடன் பேச்சு நடத்த அமெரிக்கா முன் வர வேண்டும் என இந்நாடுகள் கூறியுள்ளன. ஆனால், அமெரிக்கா தொடர்ந்து மிரட்டல் போக்கில் ஈடுபட்டுள்ளது.

வட கொரியாவைத் தாக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இதையடுத்து அமெரிக்காவையும், அதன் படைகளையும் உலகின் எந்தப் பகுதியிலும் எந்த நேரத்திலும் தாக்கும் சக்திஎங்களுக்கு உண்டு என வட கொரியா எச்சரித்துள்ளது.

அந் நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரி குவாங் ஹோக் இன்று நிருபர்களிடம் கூறுகையில், எங்களைஅமெரிக்கா சீண்டினால் மரண அடி தருவோம். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அமெரிக்கப் படைகளைத் தாக்கஎங்களால் முடியும்.

நாங்கள் தாக்கப்படும் பட்சத்தில் ஏவுகணைத் தாக்குதல் நிச்சயம் நடக்கும். அவர்கள் எங்கிருந்தாலும் தாக்குவோம். எங்கள்தாக்குதலுக்கு எந்த வரையறையும் இருக்காது என்றார்.

கொரிய மிரட்டல் உண்மை தான்: அமெரிக்கா

இதற்கிடையே அமெரிக்காவையும், அமெரிக்கப் படைகளையும் வட கொரியாவால் தாக்க முடியும் என அமெரிக்காவேகூறியுள்ளது.

டெபோடோங்-2 (டி.டி.2) ரக ஏவுகணைகள் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் திறன் கொண்டவை என்று சி.ஐ.ஏவின் தலைவர்ஜார்ஜ் டெனட் வாஷிங்டனில் நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த ஏவுகணைகள் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப்பகுதிகளை அடைய முடியும்.

மேலும், வட கொரியாவிடம் அணு ஆயுதங்களும் இருப்பதாகவும் அமெரிக்கா நம்புகிறது.

ஈராக்கைப் போல வட கொரியாவை மிக எளிதாகத் தாக்கிவிட முடியாது. 10 லட்சம் பேர் கொண்ட ராணுவமும், 5 லட்சம் ரிசர்வ்படைகளும், பல லட்சம் பேர் கொண்ட கம்யூனிஸ தற்கொலைப் படை கமாண்டோக்களும் இருப்பதால் வட கொரியாவில்நுழைந்தால் அமெரிக்காவுக்கு பெரும் உயிச் சேதம் நிச்சயம்.

மேலும் விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஏவுகணைகளையும் வட கொரியாவே தயாரித்து குவித்து வைத்துள்ளது. இதனால்ஈராக்கைப் போல விமானம் மூலம் நினைத்தபோதெல்லாம் அங்கு குண்டு வீசவும் அமெரிக்காவால் முடியாது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X