பெண் நீதிபதியை கண்டித்து நீதிமன்றங்களை புறக்கணித்த 36,000 வக்கீல்கள்
சென்னை:
பூதப்பாண்டியில் வக்கீல்கள் மீது போலீஸில் புகார் கொடுத்த பெண் நீதிபதி விஜயலட்சுமியைக் கண்டித்து தமிழகம்மற்றும் பாண்டிச்சேரி வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் மட்டும்வக்கீல்கள் போராட்டம் நடத்தவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி நீதிமன்றத்தில் சமீபத்தில் திடீர் தாக்குதல் நடந்தது. இதில் வக்கீல்கள்சேர்ந்து கொண்டு தன்னைத் தாக்கியதாக நீதிபதிவிஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில் நான்கு வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 250 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிபதி விஜயலட்சுமியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட வக்கீல்களை விடுதலை செய்யக்கோரியும் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநில வக்கீல்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள நீதிமன்றப்புறக்கணிப்பு செய்ய முடிவெடுத்தனர்.
அதன்படி இரு மாநிலங்களையும் சேர்ந்த வக்கீல்கள் இன்று நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர்.
மதுரை மாவட்டத்தில் சுமார் 2,000 வக்கீல்களும், திருச்சி மாவட்டத்தில் சுமார் 1,500 வக்கீல்களும், கோயம்புத்தூர்மாவட்டத்தில் சுமார் 1,500 வக்கீல்களும் நீதிமன்றங்களைப் புறக்கணித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட வக்கீல்கள் இன்று இரண்டாவது நாளாக நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 36,000 வக்கீல்கள் இன்று நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால்நீதிமன்றங்களை அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பெருநகர நீதிமன்றங்களைச் சேர்ந்த வக்கீல்கள் மட்டும் இந்தப்போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.


