கும்பகோணத்தில் மாசிமகம் திருவிழா: 11 ஆண்டுகளுக்குப் பின் தேரோட்டம்
கும்பகோணம்:
மாசிமகத் திருவிழாவையொட்டி கும்பகோணத்தில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் தேரோட்டம்நடைபெற்றது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் கொண்டாடப்படும் மகாமகத் திருவிழா கடந்த1992ல் நடந்தது.
அப்போது தேரோட்டம் நடைபெற்ற பின்னர் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றுகும்பகோணத்தில் தேரோட்டம் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். ஆதிகும்பேஸ்வர சுவாமி,மங்களாம்பிகை, வினாயகர், முருகன் மற்றும் சந்திகேஸ்வரர் ஆகியோர் தனித் தனித் தேர்களில்கும்பகோணம் நகரை வலம் வந்தனர்.
மாசி மகத்தையொட்டி புனித நீராடும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. அப்போதுஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமகம் குளத்தில் புனித நீராடி மகிழ்வர்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு மகாமகம் நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்தான் இந்தத் தேதியை அறிவிப்பார்.


