அயோத்தி விவகாரம்: நாடாளுமன்றத்தில் கடும் அமளி
டெல்லி:
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று அயோத்தி பிரச்சனை வெடித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரியஇடத்தை சுற்றியுள்ள நிலத்தை விஸ்வ ஹிந்து பரிஷத்திடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து பா.ஜ.க., எதிர்க் கட்சி எம்.பிக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கடும் அமளிநிலவியது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில்உரையாற்றினார்.
அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றம் விரைவாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், அந்தத் தீர்ப்பைஅனைத்துக் கட்சிகளும், மதத் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்றும் அப்போது டாக்டர் கலாம் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியதும், அயோத்தி விவகாரம் குறித்து முதலில் விவாதிக்கவேண்டும். அதற்காக கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரின.ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை.
இதனால் கொதித்துப் போன எதிர்க் கட்சி எம்.பிக்கள் ஆவேசத்துடன் மத்திய அரசுக்கு எதிரானகோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், மார்க்சிஸ்ட் தலைவர் சோம்நாத்சாட்டர்ஜி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவராஜ் பாட்டீல் ஆகியோர் பேசுவதற்கு ஜோஷிஅனுமதி அளித்தார்.
அயோத்தி விவகாரத்தில் மத்திய அரசின் நிலை குறித்து எதிர்க் கட்சித் தலைவர்கள் கடுமையாகத்தாக்கிப் பேசினர். நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டிய மத்திய அரசே மதவாதத்துடன்செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால், யார் என்னபேசுகிறார்கள் என்றே புரியாமல் ஒரே குழப்பமயமான சூழல் நிலவியது.
முலாயம் சிங் யாதவ் பேசுகையில், மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டு மக்கள் ரத்தத்தில் ஓட்டுவேட்டையாட மத்திய அரசு முயல்கிறது என்றார். சோம்நாத் சாட்டர்ஜி பேசுகையில், நாட்டைமதரீதியில் பிளக்க பா.ஜ.க. முயல்கிறது. நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே சர்ச்சைக்குரியநிலத்தை வி.எச்.பியிடம் தந்துவிட பா.ஜ.க. தந்திரம் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
சோனியாவும் எதிர்ப்பு:
இதற்கிடையே அயோத்தி விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். நீதிமன்றத்தீர்ப்பு வரும் வரை எந்த நிலத்தையும் யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது என காங்கிரஸ் கூறியுள்ளது.
நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தியின் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில்,
அயோத்தி விவகாரத்தில் நிலத்தை கையகப்படுத்த உத்தரவிட்டதே உச்ச நீதிமன்றம் தான். இப்போது,அந்த நிலத்தை ஏன் வி.எச்.பியிடம் ஒப்படைக்க பா.ஜ.க. துடிக்க வேண்டும்?. மதவாதத்தைஓட்டுக்காக பயன்படுத்துவது பா.ஜ.கவின் அசிங்கமான பழக்கமாகிவிட்டது. இதன்மூலம்மதத்தையே அக் கட்சி தவறாக பயன்படுத்துகிறது.
உயிர்களைப் பலிவாங்கி ஓட்டு வாங்குவதும், மக்களிடையே பிரிவினையைத் தூண்டுவதும்பா.ஜ.கவின் செயல் திட்டமாக மாறிவிட்டது.
இதற்கு எதிராக நாம் செயல்பட வேண்டும். மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய கடமை நமக்குஉண்டு.
அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரைஅயோத்தியில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். நிலத்தை விஸ்வ ஹிந்து பரிஷத்திடம்ஒப்படைக்கும் பா.ஜ.கவின் முயற்சிகள் நிச்சயம் தோல்வியடையும் என்றார் சோனியா.
26ம் தேதி விவாதம்:
இதற்கிடையே அயோத்தி குறித்து வரும் 26ம் தேதி விவாதம் நடத்தலாம் என்று நாடாளுமன்றஅலுவல் ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.
இதை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஏற்றுக் கொண்டன. மேலும் 26ம் தேதிவரை அயோத்தி விவகாரத்தை எழுப்ப மாட்டோம் என்றும் அவை உறுதி அளித்துள்ளன.


