தென்கொரிய சுரங்க பாதையில் தீ: 150 பேர் பலி
சியோல்:
தென் கொரியாவில் ரயில்வே சுரங்கப் பாதையில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் சுமார் 150பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
தென் கொரியாவின் தேகு நகரில் உள்ள இந்த சுரங்கப் பாதையில் ஒருவன் மர்ம பெட்டியுடன்நடமாடியதாகவும், பின்னர் ஒரு சிகரெட் லைட்டரைக் கொண்டு அந்தப் பெட்டியைக்கொளுத்தியபோது அது பயங்கரமாக வெடித்துச் சிதறி தீப்பிடித்துக் கொண்டதாகவும்கூறப்படுகிறது.
இந்தப் பயங்கரத் தீ விபத்தில் முதலில் 35 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் வந்தன.ஆனால், இப்போது மேலும் 87க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என போலீசார்கூறியுள்ளனர். இவர்களும் சுரங்கப் பாதையிலேயே பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் சாவு எண்ணிக்கை 150தைத் தாண்டும் என்று தெரிகிறது. மேலும் 130க்கும் மேற்பட்டமக்களுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
எரிந்து போன ரயில் பெட்டிகளில் நூற்றுக்கணக்கான உடல்கள் கிடப்பதாக ஒரு தகவல்தெரிவிக்கிறது.
பலர் சுரங்கப் பாதையின் இடிபாடுகளுக்குள் பெரும் புகைக்கு நடுவே சிக்கித் தவித்துக்கொண்டிருப்பதாகவும் இந்தப் புகையும் விஷத்தன்மை கொண்டதாக இருப்பதால் சாவு எண்ணிக்கைஅதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் இவ்விபத்து தொடர்பாக கிம்டே யாங் என்ற நபரைப் போலீசார் பிடித்து விசாரித்துவருகின்றனர். அவர்தான் லைட்டரைப் பற்ற வைத்து தீப்பிடிக்கச் செய்தார் என நேரில் பார்த்தசாட்சிகள் கூறியுள்ளன.
இவர் ஒரு ரயிலில் அட்டைப் பெட்டியுடன் ஏறியதாகவும், பின்னர் சிகரெட் லைட்டரைப் பற்றவைத்தாகவும் இதை பிற பயணிகள் தடுத்தபோது லைட்டரை அவன் கீழே போட்டதாகவும் இதில்அந்த ரயில் பெட்டியில் தீ பிடித்துக் கொண்டதாகவும் சிலர் கூறியுள்ளனர்.
தான் கொண்டு வந்த அட்டைப் பெட்டிக்கு இவன் தீ வைத்ததாகவும் அது வெடித்துத் சிதறி விஷவாயுவை வெளியிட்டதாகவும் வேறு சிலர் கூறியுள்ளனர்.
இவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச் சம்பவம் நடந்த தேகு நகரம் தென் கொரியாவின் மூன்றாவது பெரிய நகரமாகும்.சுரங்கத்திலும் ரயிலிலும் ஏற்பட்ட தீயை அடுத்து பயணிகள் பலரும் தங்களது நண்பர்களையும்உறவினர்களையும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
ரயிலில் தீப் பிடித்துக் கொண்டதாகவும் கதவுகள் திறக்கவில்லை என்று பலரும் கதறியுள்ளனர்.
சுரங்கப் பாதைக்கு காற்றையும் வெளிச்சத்தையும் கொண்டு செல்லும் திறப்புகள் வழியாக கரும்புகை வெளியேறிய வண்ணம் உள்ளது.


