வாஜ்பாயுடன் ராமதாஸ் சந்திப்பு: தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் கோரினார்
டெல்லி:
பா.ம.க. நிறுவனரான டாக்டர் ராமதாஸ் டெல்லியில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து தமிழகத்திற்குத்தேவையான வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டுமென்று வற்புறுத்தினார்.
நேற்று டெல்லி சென்றிருந்த ராமதாஸ் அங்கு வாஜ்பாயையும் துணைப் பிரதமர் அத்வானியையும்தனித் தனியாக சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
தமிழகத்தில் எப்போதுமே இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.சென்னையைத் தவிர மாநிலத்தில் உள்ள 28 மாவட்டங்களுமே வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாகஅறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் வறட்சி நிலையைச் சமாளிப்பதற்காக மத்திய அரசிடம் ரூ.2,094 கோடி நிதியுதவியும், 9லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் தமிழக அரசு கோரியுள்ளது.
இந்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று நான் பிரதமரிடம்வற்புறுத்தினேன். இது தொடர்பாக ஒரு கோரிக்கை மனுவையும் வாஜ்பாயிடம் கொடுத்துள்ளேன்என்றார் ராமதாஸ்.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவும் இடம் பெற்றுள்ள நிலையில்தமிழகத்திற்கு நிவாரணம் கோரி பிரதமரிடம் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


