• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பெயரை இந்துஸ்தான் என மாற்ற வி.எச்.பி. கோரிக்கை

By Staff
|

டெல்லி:

அயோத்தி விவகாரம் மீண்டும் வெடித்துள்ள நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சாதுக்கள் மாநாடு இன்றுடெல்லியில் தொடங்கியது. இதில் இந்தியாவின் பெயரை இந்துஸ்தான் என மாற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று காலை தொடங்கிய இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான சாதுக்கள்பங்கேற்றுள்ளனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேசத் தலைவர் அசோக் சிங்கல், தேசியத் தலைவர் பிரவீன் தொகாடியா,ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் பரமஹம்ஸ் ஆகியோரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ராமர் கோவில் கட்டுவது குறித்து இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இக் கூட்டத்தையொட்டி21ம் தேதிக்குள் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை தங்களிடம் தரவேண்டும் என வி.எச்.பி. மத்திய அரசுக்கு கெடு விதித்தது.

இந்த கெடுவைத் தொடர்ந்து நிலத்தை விடுவிக்கக் கோரியும், அதை வி.எச்.பியிடம் தர அனுமதிக்கக் கோரியும்உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது. இதற்கு முஸ்லீம்கள் மற்றும் எதிர்க் கட்சிகள், தேசியஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த வழக்கை 21ம் தேதிக்குள் விசாரிக்க மத்திய அரசு கோரியது. ஆனால், அப்படி விசாரிக்க முடியாது என்றுகூறிவிட்ட உச்ச நீதிமன்றம் விசாரணையை வரும் மார்ச் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

நிலத்தை தங்களிடம் ஒப்படைக்காவிட்டால் தேசிய அளவில் வன்முறை வெடிக்கும் என வி.எச்.பி. கூறியுள்ளது.

இந் நிலையில் தான் இந்த சாதுக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் பேசிய அசோக் சிங்கல், பாபர் மசூதி இருந்தஇடத்தில் முன்பு ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்திடம் தரப்பட்டுள்ளன. இதனால் அங்குகோவில் கட்ட நீதிமன்றம் விரைவில் அனுமதி தந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றார்.

தொகாடியா பேசுகையில், இந்து மதத்தின் பெருமையை நிலை நாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட உயிரையும் தரத தயாராக உள்ள ஒரு கோடி ராம பக்தர்களை நாம் திரட்டவேண்டும். இந்து மதத்தின் பெருமையை மீட்கும் முதல் முயற்சியாக இந்தியாவின் பெயரை இந்துஸ்தான் என்றுமாற்ற வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முஸ்லீம்களுக்கு ஆதரவாக உள்ளது. இதனால் புதிய மகாபாரத் போரைத்தொடுத்தால் தான் இந்து மதத்தை காக்க முடியும். வரதட்சணை, தீண்டாமை ஆகியவற்றையும் நாம் ஒழிக்கவேண்டும் என்றார் தொகாடியா.

வேத மந்திரங்கள், பக்திப் பாடல்களுடன் இந்தக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. நாளை 10,000சாமியார்கள் பங்கேற்கும் பேரணியும், நாளை மறு நாள் நாடாளுமன்றத்தை நோக்கி கண்டனப் பேரணியும்நடத்தப்படும் எனவும் வி.எச்.பி. கூறியுள்ளது.

இந்தக் கூட்டத்தையொட்டி டெல்லியில் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ராம்லீலா மைதானத்தைச்சுற்றி அதிரடிப்படை கமாண்டோக்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ம.பியில் அமைதி திரும்புகிறது:

இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தில் போஜ்சாலா கோவில்- கமால் மசூதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாகஏற்பட்ட மதக் கலவரம் ஊரடங்கு உத்தரவால் அடக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று முன் தினம் 3 பேர் வெட்டிக்கொல்லப்பட்டனர்.

இந்தக் கலவரத்தையடுத்து இந்த புனிதத் தலத்தில் வாரத்தில் ஒரு நாள் இந்துக்களும், ஒரு நாள் இஸ்லாமியர்களும்வழிபாடு நடத்த அந்த மாநில காங்கிரஸ் முதல்வர் திக் விஜய் சிங் அனுமதி தந்துள்ளார். இதில் சிலைகள் ஏதும்இல்லாததால் பூஜை பொருட்கள் எதையும் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்றும் அரசு கூறியுள்ளது.

இரண்டு நாட்களாக மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட அந்தத் தலம் அமைந்துள்ள தர் நகரில் அமைதி திரும்பஆரம்பித்துள்ளது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X