திமுகவை நம்பி ஏமாறாதீர்கள்: காங்கிரசாருக்கு ராதாரவி அறிவுரை
ஆழ்வார்திருநகரி:
திமுகவை நம்பி மோசம் போய்விடாதீர்கள் என்று நடிகரும் அதிமுக எம்.எல்.ஏவுமான ராதாரவி காங்கிரஸ்கட்சியினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.
சாத்தான்குளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் கூறியதாவது:
இன்று ஆறரை கோடி தமிழர்களின் முதல்வராக உள்ள ஜெயலலிதா நாளை 100 கோடி இந்தியர்களின்பிரதமராவார்.
திமுகவில் 29 ஆண்டுகள் குப்பை கொட்டினேன். என்னை மதிக்கவோ, ஆதரவு தரவோ கருணாநிதிக்கு மனமில்லை.ஆனால், அதிமுகவில் சேர்ந்தவுடன் எனக்கு எம்.எல்.ஏ. பதவி தந்தார் ஜெயலலிதா. தொண்டர்களை மதிப்பவர்ஜெயலலிதா.
ஸ்டாலின் சாத்தான்குளத்துக்கு வந்து அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார். அவருக்குதைரியம் இருந்தால் போட்டியிட வேண்டியது தானே?. காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு ஆலோசனையை மட்டும்கூறிக் கொள்கிறேன்.
யாரை வேண்டுமானாலும் நம்புங்கள். ஆனால், திமுகவை மட்டும் நம்பி விடாதீர்கள். மற்ற கட்சிகளை சுட்டுஎரிக்கும் சூரியன் தான் திமுக. அவர்கள் நம்ப வைத்து கழுத்தறுப்பார்கள்.
உயிரோடு இருந்தவரை காமராஜரை தரக் குறைவாகப் பேசிய திமுகவினர் இன்று அவரைப் புகழ்வது ஓட்டுக்காகத்தான். திமுகவை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என காஙகிரஸ் தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன்.


