எம்.பிக்களிடம் கமிஷன் கேட்ட ஊழல் மாயாவதி
லக்னெள & டெல்லி:
தொகுதி வளர்ச்சி நிதியில் ஒரு பகுதியை தனக்கு கமிஷனாகத் தருமாறு தனது எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி உத்தரவிட்டதைக் காட்டும் வீடியோ படத்தை அம் மாநில எதிர்க் கடசியான சமாஜ்வாடிகட்சி வெளியிட்டுள்ளது.
இப்படி கமிஷன் அடிப்பது ஆட்சியில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் பொறுந்தும். தமிழகத்தைப் பொறுத்தவரைபொதுப்பணித்துறை காண்ட்ராக்ட் பெற 35 சதவீதத்தை அதிகாரிகளுக்கு காண்ட்ராக்டர்கள் கமிஷன் தரவேண்டும்.
இதில் ஒரு பகுதி அரசியல்வாதிகளுக்குப் போகும். இது தவிர அரசியல்வாதிகளுக்கு காண்ட்ராக்டர்கள் நேரடியாக20 சதவீதம் கமிஷன் தர வேண்டும. இதனால் திட்டச் செலவில் 45 சதவீதம் தான் மிஞ்சும். இதில் காண்ட்ராக்டர்சாப்பிட்டது போக மிச்சத்தில் தான் ரோடோ, பாலமோ கட்டுவார்கள்.
இதனால் தான் ஒரு மழைக்குக் கூட ரோடுகள் தாங்குவதில்லை. இந்த கமிஷன் சதவீதம் இந்தியா முழுவதுமேஉண்டு. மாநிலத்துக்கு மாநிலம் இந்த கமிஷன் தொகையில் கொஞ்சம் ஏற்றம் இறக்கம் இருக்கும்.
ஒவ்வொரு எம்.பிக்கும் தனது தொகுதியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ. 2 கோடி தருகிறது.அதே போல எம்.எல்.ஏக்களுக்கு மாநில அரசு ரூ. 75 லட்சம் ஒதுக்குகிறது. இதில் பெருமளவை தாங்களேஉண்டுவிடும் பெரும்பாலான அரசியல்வாதிகள் மிச்சம் மீதி இருக்கும் பணத்தில் பஸ் ஸ்டாப்களில் நிழற்குடைகட்டித் தருவார்கள்.
அல்லது தாரே இல்லாமல் வெறும் மண்ணை வைத்து ரோடு போடுவது, சிமெண்டே இல்லாமல் பள்ளிக் கூடகட்டடம் கட்டுவது போன்ற பொதுச் சேவைகளுக்கு மீதப் பணத்தை செலவளிப்பார்கள்.
இது எல்லா கட்சிகளுக்கும் பொறும்தும். ஆனால், அதை தனது கட்சி எம்.பிக்களின் கூட்டத்தில் பகிரங்கமாகவேகமிஷன் தரச் சொன்ன மாயாவதி இப்போது கையும் களவுமாக வீடியோவில் பதிவாகியுள்ளார். 2001ம் ஆண்டுபகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பிக்கள் கூட்டத்தில் பேசிய மாயாவதி இந்த கமிஷன் தொகையைத் தருமாறுகேட்டுள்ளார்.
வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:
மத்திய அரசு உங்களுக்கு ரூ. 2 கோடி தருகிறது. எம்.எல்.ஏக்களுக்கு ரூ. 75 லட்சம் தருகிறது. இதையெல்லாம்நீங்களே மொத்தமாக முழுங்கி விடாதீர்கள். உங்களுக்கும் செலவு இருக்கும். வீட்டுக்கு ஒதுக்க வேண்டி இருக்கும்.சொத்து சேர்க்க வேண்டியது வரும். ஆனால், எல்லாவற்றையும் நீங்களே தின்றுவிடாமல் கொஞ்சத்தையாவதுகட்சிக்காக கொடுங்கள்.
நான் சொல்வது தப்பா?. இவ்வாறு மாயாவதி ஒளிவுமறைவு இல்லாமல் பேசியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட கட்சி வீடியோ இப்போது எதிர்க் கட்சியான சமாஜ்வாடிக் கட்சியிடம் சிக்கியுள்ளது. இந்தவீடியோவை மாநில ஆளுநரிடம் சமர்பித்துள்ள சமாஜ்வாடிக் கட்சி உடனே மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியுள்ளது.
இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெடித்தது. பிரச்சனையைக் கிளப்பிய சமாஜ்வாடிஎம்.பிக்கள் உத்தரபி பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள மாயாவதி- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி உடனே பதவி விலகவேண்டும் என கோஷமிட்டனர்.
இதற்கு எதிராக பா.ஜ.க., பகுஜன் சமாஜ் எம்.பிக்கள் குரல் எழுப்பினர். இதனால் மக்களவையில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
மாயாவதியின் கமிஷன் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அனைத்து எதிர்க் கட்சிஎம்.பிக்களும் கோரிக்கை விடுத்தனர். மக்களுக்காக செலவு செய்ய, தொகுதி வளர்ச்சிக்காக செலவு செய்ய மத்தியஅரசு ஒதுக்கும் நிதியை இப்படி வெளிப்படையாக சுருட்டித் திண்பது அசிங்கமான அரசியலின் அடையாளம்என்று கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் சாடினர்.
மாயாவதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அனைத்து எதிர்க் கட்சிகளும் கோரின.
இந்த விவகாரத்தால் மாயாவதியை ஆதரிக்கும் பா.ஜ.கவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநிலபா.ஜ.க. தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, மாயாவதியுடன் பேச்சு நடத்தினார்.
அப்போது இது குறித்து ஏதாவது ஒரு விசாரணை நடத்தி ஊழலை மூடி மறைப்பது என்று முடிவு செய்யப்பட்டதாகத்தெரிகிறது.
அந்த கேசட் எடிட் செய்யப்பட்டது என்றும், உண்மையானது அல்ல எனவும் கல்ராஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.


