தடுப்பு அணை கட்டும் பணியை தடுத்த கிராம மக்கள் கைது
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள மரவமங்களம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணைப்பணிகளைத் தடுக்க முயன்ற 160 பேர் கைது செய்யப்பட்டனர்.
இங்கு மழை நீரைத் தேக்கி வைக்க நபார்டு வங்கியின் உதவியுடன் ரூ. 51 லட்சம் செலவில் தடுப்பணை கட்டிவருகிறது தமிழக அரசு.
இந்த அணையில் சேமிக்கப்படும் நீரை சிலைமான் கால்வாய் வழியாக அனுப்பி சில கிராமங்களுக்கு பாசனத்துக்குஉதவ திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மரவமங்களம் உள்ளிட்ட 12 கிராம மக்கள் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.
கிராம மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி திங்கள்கிழமை அணைக் கட்டுப் பணிகள் தொடங்கின. இதையடுத்துகிராம மக்கள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந் நிலையில் திடீரென அணைகட்டும் இடத்தைமுற்றுகையிட்டனர். தொழிலாளர்களை தாக்க முயன்றனர்.இதையடுத்து 160 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடாமல் கடுக்க அப் பகுதியில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.


