என்.ஆர்.ஐ. மருத்துவ "சீட்" கட்டணம் ரூ.50 லட்சம்
சென்னை:
அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டு இந்தியர்களுக்கான (என்.ஆர்.ஐ.) ஒரு சீட்டின் விலைரூ.50 லட்சம் என தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்பிற்காக இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின் படி ஆண்டுதோறும் 315கூடுதல் இடங்களை ஒதுக்க தமிழக மருத்தவக் கல்வித் துறை தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.இந்த 315 இடங்களில் 150 சீட்டுகள் என்.ஆர்.ஐக்களுக்காக ஒதுக்கப்பட உள்ளன. சென்னைமருத்துவக் கல்லூரி உள்பட அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த சீட்டுகள்ஒதுக்கப்படும்.
இந்த என்.ஆர்.ஐ. கோட்டா சீட்களை பெற விரும்புவோர் ரூ.50 லட்சம் செலுத்த வேண்டும்.
முதல் ஆண்டு ரூ.20 லட்சமும், அதற்குப் பின்னர் வரும் மூன்று ஆண்டுகளில் தலா ரூ.10 லட்சம்வீதம் ரூ.30 லட்சம் பணமும் என்.ஆர்.ஐ. மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும். மாணவர்களின்கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவையும் இந்தக் கட்டணத்தில் அடங்கிவிடும்.
ஒரு சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போதே நான்கரைஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.50 லட்சம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே கூடுதல் இடங்கள் தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சிலைச் சேர்ந்த மூன்று பேர்தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வுகள் முடிந்தபின்னர், வரும் ஜூலை மாதத்திற்குள் கூடுதல் இடங்களுக்கான அனுமதி கிடைத்து விடும் என்றுகூறப்படுகிறது.
இன்ஜினியரிங் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் தனியார் கல்லூரி முதலாளிகளே நிரப்பிக் கொள்ளலாம் எனநேற்று தான் தமிழக அரசு அறிவித்தது என்பதும் குறிப்பிடக்கக்கது. இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டுதனியார் கல்லூரி நிர்வாகத்தினருக்கு 20,000 சீட்கள் அதிகம் கிடைக்கும்.
அரசு நுழைவு தேர்வு எழுதி, கவுன்சிலிங்கில் வென்று வரும் மாணவர்களுக்கு இந்த 20,000 இடங்கள் குறையும்.கடந்த ஆண்டு நுழைவுத் தேர்வு, கவுன்சிலிங் மூலம் வரும் மாணவர்களுக்கு 52,600 இடங்கள்ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் வரும் கல்வி ஆண்டில் இது 33,000 சீட்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிப்புக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பிரீ சீட் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இதனால் நுழைவுத் தேர்வெழுதி சீட் கிடைப்பது குதிரைக் கொம்பாகும். கிடைத்தாலும் பீஸ் கட்டுவது அதை விடக்கஷ்டமாகும்.


