அதி சக்தி ராக்கெட் என்ஜின்: இந்தியா தயாரித்தது
டெல்லி:
தொலைத் தொடர்பு சேவைகளுக்கு உதவும் பெரிய செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் திறன் மிக்க ராக்கெட்களுக்குத்தேவையான கியாைேஜெனிக் என்ஜின்களை இந்தியாவே தயாரித்துள்ளதாக பிரதமர் வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
பூமியில் இருந்து 36,000 கி.மீ. உயரத்தில் செயற்கைக் கோளை ஏவினால் தான் அது தகவல் தொடர்புக்கு பயன்படும். இப்போதுள்ளபி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களால் 800 கி.மீ. உயரத்துக்குத் தான் செயற்கைக் கோள்களை செலுத்த முடியும்.
அதிக சக்தி வாய்ந்த கிரையோஜெனிக் ராக்கெட்களை உருவாக்க திரவ எரிபொருளால் இயங்கும் கிரையோஜெனிக் என்ஜின் தேவை.இதை இந்தியாவுக்குத் தர ரஷ்யா முன் வந்தது. ஆனால், இதை வைத்து கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை இந்தியாதயாரிக்கும் என்று கூறி ரஷ்யாவுக்கு அமெரிக்கா தடை விதித்தது.
இதனால் இந்த என்ஜின் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அமெரிக்கத் தடையையும் மீறி காலதாமதமாக இந்தியாவுக்கு இந்தஎன்ஜினை ரஷ்யா வழங்கியது.
ரஷ்யா இழுத்தடித்ததால் இந்தியாவே இந்த என்ஜின்களைத் தயாரிக்கும் பணியை ஆரம்பித்தது. இந்தப் பணி வெற்றிகரமாகமுடிந்துள்ளதாகத் தெரிகிறது. இன்று மக்களைவையில் பேசிய பிரதமர் வாஜ்பாய், கிரையோஜெனிக் என்ஜினை இந்திய விண்வெளி ஆய்வுமையமான இஸ்ரோ தயாரித்துவிட்டது என்றார்.
இதற்கிடையே இந்தியா தயாரித்துள்ள தரையில் இருந்து விமானங்களைத் தாக்கும் திரிசூல் ஏவுகணைகளில் தொழில்நுட்பப் பிரச்சனைகள்அதிகம் இருப்பதால் அந்த ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


