புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் நடு ரோட்டில் வெட்டிக் கொலை: திண்டுக்கல்லில் பதற்றம்
திண்டுக்கல்:
புதிய தமிழகம் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் வட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து அந் நகரில் பதற்றம் பரவியுள்ளதால்போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதக் கலவரங்களுக்கு பேர் போன திண்டுக்கல்லில் இச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் கிருஷ்ணசாமியின் கட்சியானஇதன் மாவட்டச் செயலாளராக ஜாகிர் உசேன் இருந்தார். அவருக்கு வயது 25. இன்று காலை பத்தரை மணியளவில் மக்கான் தெருவில்உள்ள தனது வீட்டில் இருந்து பழைய பூ மார்க்கெட் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரை ஒரு கும்பல் வழிமறித்தது. கையில் அரிவாள்களுடன் நின்ற அக்கும்பலைப் பார்த்தவுடன் ஜாகிர் உசேன் ஓடத்தொடங்கினார். ஆனால், விடாமல் விரட்டிச் சென்ற அக் கும்பல் நடு ரோட்டில் வைத்து கண்டந்துண்டமாக வெட்டியது. இதில் அவர் அந்தஇடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதையடுத்து முஸ்லீம்களும், புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த தலித்களும் ஏராளமான அளவில் அங்கு கூடினர். இதனால் அங்கு பெரும்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தவுடன் திண்டுக்கல் முழுவதும் ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திண்டுக்கல் வடக்குகாவல்நிலைய போலீசார் ஜாகிர் உசேனின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குக்கு கொண்டு சென்றனர்.
கொலையாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் அல்லது ஜாதி, மதரீதியிலான கொலை அல்ல என்றுதெரிகிறது. முன்விரோதம் காரணமாக இக் கொலை நடந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.


