For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவேரி மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய யானைகள்

By Staff
Google Oneindia Tamil News

நீலகிரி:

முதுமலை சரணாயலத்தின் மிக மூத்த யானையான காவிரி மாரடைப்பு காரணமாக இறந்தது. இந்தமறைவினால் சரணாயத்தில் உள்ள மற்ற யானைகளும் பெரும் துக்கத்தில் மூழ்கியுள்ளன. அவைஅழுதவண்ணம் உள்ளன.

முதுமலை வனவிலங்குகள் சரணாலயத்தில் தெப்பக்காடு, அபயரன்யம் ஆகிய இடங்களில் இருயானை முகாம்கள் உள்ளன. அபயரன்யம் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் இந்த முகாம்மோயார் ஆற்றுப் பகுதியில் உள்ள பம்பாக்ஸ் என்ற இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இங்கு 14 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இதில் காவேரி என்ற 53 வயதான பெண் யானைதான் மூத்தது. மற்ற அனைத்து யானைகளாலும் பெரிதும் அன்புடன் நடத்தப்பட்டு வந்தது இந்தயானை.

நேற்று முன் தினம் மாலை இந்த யானையின் பாகன் பொம்மன் என்பவர் இதனை ஆற்றுக்குள்அழைத்துச் சென்றார். அங்கு நன்றாக நீரைப் பருகியதும் திடீரென அந்த யானை அங்கேயே சுருண்டுவிழுந்து இறந்தது.

இதையடுத்து அந்தமுகாமில் உள்ள மற்ற 13 யானைகளும் காவேரியைச் சுற்றிக் கூடி நின்றுஅழுதன.

தகவல் அறிந்தவுடன் வனத்துறை ரேஞ்சர் பத்மநாபன், விலஙகு நல மருத்துவர் கலைவாணன்ஆகியோர் யானையை சோதனையிட்டனர். அப்போது அது மாரடைப்பால் இறந்தது உறுதியானது.

நேற்று மாலை யானையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னர் அது அடக்கம்செய்யப்பட்டது. அப்போது பிளிறியபடி துதிக்கையை உயர்த்தி மற்ற யானைகள் கண்ணீருடன்காவேரிக்கு அஞ்சலி செலுத்தின.

யானைகளின் இச் செயல் அங்கு கூடியிருந்த மக்களின் கண்களிலும் நீரை வரவழைத்துவிட்டது.முகாமில் உள்ள யானைகள் இன்றும் கூட கண்களில் நீரைக் கசிந்தபடிதான் நின்று கொண்டுள்ளன.

இந்த யானையை கேரளாவைச் சேர்ந்த நெல்சன் என்பவர் 1974ம் ஆண்டில் முதுமலைசரணாலயத்துக்கு நன்கொடையாகத் தந்தார். இத்தனை ஆண்டுகளில் அது 5 குட்டிகளை ஈன்றுள்ளது.அதில் இரண்டு இறந்துவிட்டன.

ஒன்று திருவண்ணாமலை கோவிலுக்கும், இனனொன்று வண்டலூர் பூங்காவுக்கும் தரப்பட்டன.இன்னொன்று வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X