For Daily Alerts
Just In
நடிகர் ராஜ்குமாருக்கு நாளை மூட்டு ஆபரேஷன்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக சென்னை வந்துள்ள ராஜ்குமாருக்கு மியாட் மருத்துவமனையில்சில நாட்களுக்கு முன் அறுவைச் சிகிச்சை நடந்தது. அதன் பிறகு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்வைக்கப்படடிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன்இருப்பதாகவும், 100 மீட்டர் தூரம் வரை நடந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது வலது கால் மூட்டும் ஆபரேஷன் மூலம் சரி செய்யப்பட உள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் இந்தஆபரேஷன் நடைபெறும் என்று தெரிகிறது.


