29 நாட்கள் நீடிக்கப் போகும் அக்னி நட்சத்திரம்: வெயில் மண்டையை பிளக்கும்
சென்னை:
தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் கொடுமை மிக அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்) கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு நீடிக்கும் என்று தெரியவந்துள்ளது. கடந்த இருஆண்டுகளாக தலா 25 நாட்கள் கத்தரி வெயில் நீடித்தது. ஆனால், இந்த ஆண்டு வரும் மே 4ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி முடிய 29நாட்களுக்கு கத்தரி வெயில் இருக்குமாம்.
இந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழையும், வட கிழக்குப் பருவ மழையும் பெய்யாமல் போனதால் சும்மாவே தமிழகம் வறண்டு போய்கிடக்கிறது. இதில் மே மாத அக்னி நட்சத்திரக் கொடுமையும் சேர்ந்து கொண்டால் நிலைமை மிக மோசமாக இருக்கும்.
மேலும் இப்போதே சென்னை, மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் தண்ணீர் பஞ்சமும் ஏற்பட்டுவிட்டது. இந்தப் பஞ்சம் மே மாதம்நெருங்கும்போது மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவும் அபாயமும் உள்ளது.
அக்னி நட்சத்திர காலம் உச்சத்தில் இருக்கும்போது வெப்ப நிலை சராசரியாக 109 டிகிரி வரை உயரக் கூடும் என்று தெரிகிறது. இதுவழக்கமான வெப்பத்தைவிட 5 முதல் 7 டிகிரி அதிகமாகும்.
இந்த கால கட்டத்தில் அநாவசியமாக வெளியில் செல்வதையே தவிர்த்துவிடுவது நல்லது. நிறைய நீர் அருந்துவதும், கதர் உடைகளைஅணிவதும் நன்மை தரும்.


