விசா இன்றி தங்கியுள்ள பாகிஸ்தானியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
சென்னை:
5 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் இந்தியக் குடியுரிமை பெற உடனடியாகவிண்ணப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று தமிழக அரசுஎச்சரித்துள்ளது.
இந்தியாவில் ஏராளமான பாகிஸ்தானியர்கள் உரிய விசா இல்லாமல் நீண்ட காலமாகத் தங்கியிருப்பதாகவும்,அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சில மாதங்களுக்கு முன் துணைப் பிரதமர் அத்வானிதெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் அறிவுரைப்படி தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேல் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக குடியுரிமை கோரி இந்தியஅரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
முறையான விசா பெற்றும், விசா காலத்திற்குப் பிறகும் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் இந்த வாய்ப்பைப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அந்த அறிவிப்பில் கூறியுள்ளது.


