For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாமஹாக் ஏவுகணைகளால் தாக்கப்படும் ஈராக்

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாத்:

ஈராக் மீது எப்-117 ரக விமானங்கள் தவிர, டாமஹாக் ரக ஏவுகணைகளும் அதி பயங்கரத் தாக்குதல் நடத்தி வருகின்றன.

வளைகுடாவில் நிறுத்தப்பட்டுள்ள பல்வேறு அமெரிக்கப் போர்க் கப்பல்களில் இருந்து இந்த ஏவுகணைகள் செலுத்தப்பட்டு வருகின்றன.இந்த ஏவுகணைகளில் முன்னதாகவே இலக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

Tomahawk Missile getting firedஏவப்பட்டவுடன் இந்த ஏவுகணைகளை செயற்கைக் கோள்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும். இலக்கை அடைந்தவுடன்முன்னதாகவே பதிவான டேட்டாவுடன் ஒப்பிட்டுப் பார்த்து (Digital Scene Matching Area Correlation) மிகச் சரியாக தாக்கும் திறன்கொண்டவை இந்த ஏவுகணைகள்.

கிட்டத்தட்ட 1,600 கி.மீ. தூரம் பயணிக்கும் இந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவது மிகக் கடினம். எந்த கால நிலையிலும் செயல்படும்.போர்க் கப்பல், நீர் மூழ்கிகளில் இருந்து இதைச் செலுத்த முடியும். ஏவப்பட்டவுடன் திட எரிபொருளால் இயங்கும் இந்த ஏவுகணைகள்பின்னர் டர்போ பேன்கள் மணிக்கு 1,050 கி.மீ. தூரத்தில் விரையும்.

குறைந்த உயரத்தில் பறப்பதாலும், 5.5 மீட்டர் நீளமும் வெறும் 51 செ.மீ. விட்டமும் 8 அடி இறக்கைகளும் கொண்ட சிறிய ஏவுகணைகள்என்பதால் இவற்றை ரேடார்களாலும் கண்டறிய முடியாது. ஏவப்பட்ட பின்னர் கூட ஏவுகணையின் பாதையை மாற்ற முடியும்.

1,000 பவுன்ட் எடை கொண்ட குண்டுகளை ஏந்திச் செல்லும் திறன் கொண்டவை. அணு குண்டையும் கொண்டு செல்லும் திறன் கொண்டது.ஒரு ஏவுகணை 14 லட்சம் டாலர் மதிப்பு கொண்டது.

தற்போது யு.எஸ்.எஸ். செயினா, யு.எஸ்.எஸ். மாண்ட்பெலியர் ஆகிய 2 நீர்மூழ்கிகளில் இருந்தும், யு.எஸ்.எஸ். கெளபென்ஸ், யு.எஸ்.எஸ்.பங்கர் ஹில், யு.எஸ்.எஸ். மிலியுஸ், யு.எஸ்.எஸ். டோனால்ட் குக் 4 போர்க் கப்பல்களில் இருந்தும் ஈராக் மீது ஏவுகணைகள் வீசப்பட்டுவருகின்றன.

டாமஹாக் ஏவுகணைகளின் படங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X