For Daily Alerts
Just In
தமிழ் அன்னை சிலை அகற்றம்: மதுரையில் பதற்றம்
மதுரை:
மதுரை அண்ணா நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட தமிழ் அன்னை சிலையை காவல் துறையினர்அகற்றினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
அண்ணா நகரில் உள்ள நான்கு ரோடு சந்திப்பில் சிலர் தமிழ் அன்னை சிலையை வைத்திருந்தனர்.
முக்கியப் பகுதியில் அனுமதி இல்லாமல் சிலை வைக்கப்பட்டதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் அண்ணா நகர் விரைந்தனர். சிலையை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
சிலை அகற்றப்படுவதை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும்பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
இருப்பினும் அவர்களைப் பொருட்படுத்தாத போலீஸார் சிலையை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
சிலை வைத்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


