மேம்பால ஊழல்: 25 அடிக்கு குழி தோண்டி சி.பி.சி.ஐ.டி. சோதனை
சென்னை:
சென்னையில் கட்டப்பட்டுள்ள ஒரு மேம்பாலத்திற்கு அருகே 25 அடி ஆழத்திற்கு குழி தோண்டிதூண்களின் பலம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பரிசோதனை செய்தனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் பாலங்கள் கட்டப்பட்டன. இந்தப்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த2001 ஜூன் 29ம் தேதி நள்ளிரவு திமுக தலைவர் கருணாநிதி அதிரடியாகக்கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
தற்போது ஒவ்வொரு பாலமாக சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். சி.பி.சி.ஐ.டி.போலீஸாருக்கு உதவியாகப் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் பாலங்களைச் சோதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ராயப்பேட்டை-பீட்டர்ஸ் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே சோதனை நடந்தது.பாலத்திற்கு அருகே உள்ள தூண் பகுதிகளில் சுமார் 25 அடி ஆழத்திற்குக் குழி தோண்டி, தூணின்உறுதித் தன்மை குறித்து ஆராயப்பட்டது.
ஆனால் இவ்வளவு பெரிய குழி தோண்டுவதால் அதில் மழை நீர் அல்லது சாக்கடை நீர் தேங்கிபாலத்தின் தற்போதைய ஸ்திரத் தன்மையும் பாதிக்கப்படுமே என்று பொதுமக்கள் அதிருப்திதெரிவித்துள்ளனர்.


