For Daily Alerts
Just In
மணி நாடார் மனைவிக்கு ஜெ. ரூ.1 லட்சம் நிதியுதவி
சென்னை:
சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவான மணி நாடாரின் மனைவி ஜானகிக்கு ரூ.1லட்சம் கருணைத் தொகையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
சாத்தான்குளம் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தமணி நாடார்.
கடந்த நவம்பர் மாதம் இவர் திடீரென்று இறந்ததைத் தொடர்ந்து சமீபத்தில் சாத்தான்குளத்தில் நடந்தஇடைத் தேர்தலில் அதிமுகவின் நீலமேகவர்ணம் வெற்றி பெற்றார்.
பதவியில் இருக்கும்போது எம்.எல்.ஏக்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்குரூ.1 லட்சம் சிறப்பு கருணைத் தொகை வழங்கப்படும்.
அந்த வகையில் மணி நாடாரின் மனைவி ஜானகிக்கு ஜெயலலிதா ரூ.1 லட்சத்திற்கானகாசோலையை வழங்கினார். அவருக்கு ஜானகி நன்றி தெரிவித்தார்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் ஜானகி இணைந்து விட்டார் என்பதுநினைவுகூறத்தக்கது.


