For Daily Alerts
Just In
கோவை: நடு ரோட்டில் கிடந்த 100 ரூபாய் நோட்டுக்கள்
கோவை:
கோயம்புத்தூரில் உள்ள டவுன் ஹால் சாலை சந்திப்பில் கேட்பாரற்றுக் கிடந்த 100 ரூபாய்நோட்டுக்களை 2 போலீஸ் கான்ஸ்டபிள்கள் பார்த்து மீட்டு போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தனர்.
போக்குவரத்து நெரிசல் மிக்க டவுன் ஹால் சாலை சந்திப்பில் ஜெயசீலன் மற்றும் ராஜ்குமார் ஆகியஇரு போக்குவரத்துக் காவலர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சாலையில் ஒரு பார்சல் கிடந்ததைப் பார்த்து அதை எடுத்து ஜாக்கிரதையாகப் பிரித்தனர்.
அதில் ஐம்பது 100 ரூபாய் நோட்டுக்கள், சில பத்து ரூபாய் நோட்டுக்களும் இருந்தன. இதைப்பார்த்து அதிர்ந்த அவர்கள் அந்த ரூபாய் நோட்டுக்களை கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனர் சஞ்சய்அரோராவிடம் ஒப்படைத்தனர்.
சாலையில் சென்ற ஏதாவது ஒரு வாகனத்திலிருந்து இந்த ரூபாய் நோட்டுக்கள் தவறிவிழுந்திருக்கலாம் என்று அரோரா தெரிவித்தார்.


