For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜ்னீஷ் ஆஸ்ரமத்தில் சார்ஸ் புரளி

By Staff
Google Oneindia Tamil News

புனே:

புனேயில் உள்ள ரஜ்னீஷின் ஓஷோ ஆஸ்ரமத்தில் வசித்து வரும் அவரது சிஷ்யர்களில் பலர் சார்ஸ் நோயால்பாதிக்கப்பட்டுள்ளதாக புரளி கிளம்பியது.

இந்த ஆஸ்ரமத்தில் பல வெளிநாட்டினர் தங்கியுள்ளனர். மேலும் பலர் வந்து சென்றவண்ணம் உள்ளனர். உலகின்அனைத்து நாடுகளிலும் இருந்தும் இவர்கள் வருகின்றனர். இதனால், இந்த ஆஸ்ரமத்திலும் சார்ஸ் பரவியிருக்லாம்என்று கூறப்பட்டது.

இதையடுத்து மகாராஷ்டிர நலத்துறை அதிகாரிகள் குழு அங்கு சென்று சோதனை நடத்தியது. இறுதியில் அங்குயாரும் சார்ஸ் நோயால் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. கோரேகாவ்ன் பூங்காவில் உள்ள இந்தஆஸ்ரமத்தில் பெரிய டாக்டர்கள் படை இன்று சோதனை நடத்தியது.

இந்த ஆஸ்ரமத்துக்கு சீனா, ஹாங்காங்கில் இருந்து மிகக் குறைவானவர்களே வந்து செல்வதாகவும், அரசுமருத்துவமனைகளைவிட மிக அதிக வசதிகளும் நவீன கருவிகளும் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனைஆஸ்ரமத்துக்குள்ளேயே அமைந்துள்ளதாகவும் இந்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனால், சார்ஸ் வந்தாலும் அதைச் சமாளிக்கும் வசதி இந்த ஆஸ்ரமதுக்குக்கு உண்டு என்று கூறியுள்ளனர்.

இந்திய தெர்மாமீட்டருக்கு கிராக்கி:

சார்ஸ் நோய் பரவலையடுத்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இந்திய தெர்மோமீட்டருக்கும், மாஸ்குகளுக்கும்பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

டிஜிட்டல் தெர்மோமீட்டர்களைத் தயாரிக்கும் பெங்களூரைச் சேர்ந்த ஆப்டோ சர்க்யூட் நிறுவனத்துக்குஉடனடியாக 10 லட்சம் தெர்மோமீட்டர்களை வழங்குமாறு ஆர்டர் வந்துள்ளது.

அதே போல மாஸ்குகள், கிளவுஸ்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கில் ஆர்டர்கள் வந்துகுவிந்தவண்ணம் உள்ளன.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X