மழையால் மண் சரிவு: ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து
மேட்டுப்பாளையம்:
பலத்த மழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ஓடும்மலை ரயில் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோடை கால சீசனையொட்டி ஊட்டிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சென்ற வண்ணம்உள்ளனர்.
இயற்கைக் காட்சிகளை முழுமையாக ரசிப்பதற்காக பெரும்பாலான பயணிகள் மலை ரயிலில் செல்வதையேவிரும்புகின்றனர். இதனால் ஊட்டிக்குச் செல்லும் இந்த மலை ரயிலில் எப்போதும் நிறைய கூட்டம் இருப்பதுவழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்த மலை ரயில் திடீரென தடம்புரண்டது. அதிலிருந்த 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டுக் கீழே இறங்கின.
இதையடுத்து மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரயில் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகவும்அதிருப்தி அடைந்தனர். ஆனாலும் ஓரிரு நாட்களிலேயே தண்டவாளம் சரி செய்யப்பட்டு மலை ரயில் மீண்டும்ஓடத் தொடங்கியது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாகத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெய்து வந்த மழை நீலகிரி மாவட்டத்தையும்விட்டு வைக்கவில்லை. மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இதனால் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் ரயில் பாதை முழுவதும் மண்ணால்மூடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மீண்டும் மலை ரயில் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஊட்டிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மேலும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆண்டு முழுவதும்இந்த மண் சரிவுப் பிரச்சனை ஏற்படுவது தெரிந்ததுதானே. எனவே ரயில்வேத் துறை இதற்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


