For Daily Alerts
Just In
நாளை மறுநாள் தமிழகத்தில் முழு கடையடைப்பு
சென்னை:
மே 5ம் தேதி தமிழகம் முழுவதும் வணிகர் தினம் கொண்டாடப்படுவதால் அன்று கடைகள் அடைக்கப்படும் என்றுதமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
வணிகர் தினம் மே 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே அன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்படும்.சென்னையில் நடக்கும் வணிகர் தின விழாவில் அகில இந்திய வணிகர் சங்கத் தலைவர் ஷியாம் பிகாரி மிஸ்ராகலந்து கொள்கிறார் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் லாரி ஸ்டிரைக் காரணமாக மக்கள் பலசரக்கு முதல் காய்கறி வரை எல்லா பொருள்களுக்காகவும்சிரமப்பட்டார்கள். அடுத்து வங்கிகள் ஸ்டிரைக் வந்தது. இப்போது மீண்டும் கடையடைப்பு.


