பஸ் ஸ்டாண்டில் அநாதையான சிசு
தர்மபுரி:
தர்மபுரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், பெண் குழந்தையைக் கொடுத்து விட்டு அதன் தாய் தலைமறைவானார்.அந்தக் குழந்தையும் அரசுத் தொட்டிலில் தஞ்சமடைந்துள்ளது.
தர்மபுரி பஸ் நிலையத்தில் சாந்தா என்ற பெண்மணி நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை அணுகிய ஒரு பெண், தன்னிடமிருந்தபெண் குழந்தையைக் கொடுத்து ஒரு நிமிடம் குழந்தையைப் பிடித்திருங்கள், எனது சூட்கேஸ்களை எடுத்து வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.
ஆனால், நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் வரவில்லை. இதனால் என்ன செய்வது என்று அறியாத சாந்தா, பஸ் நிலையத்தில் உள்ளபோலீஸ் பூத்திற்குச் சென்று குழந்தையை ஒப்படைத்தார்.
பின்னர் அக் குழந்தை தொட்டில் குழந்தைத் திட்ட அதிகாரிகளிடம் சேர்க்கப்பட்டது.
பெண் குழந்தையை வளர்க்க விரும்பாத அந்தத் தாய், அதைக் கொல்லவும் விரும்பாமல் இவ்வாறு அடுத்த பெண்ணிடம் கொடுத்துவிட்டுத்தலைமறைவாகியுள்ளார்.
தமிழகத்தில் தொட்டில் குழந்தைத் திட்டம் இருப்பதால் இந்த சிசுவும் தப்பியுள்ளது.


