For Quick Alerts
For Daily Alerts
Just In
வாஜ்பாயின் சகோதரி மரணம்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாயின் சகோதரி ஊர்மிளா மிஸ்ரா இன்று காலை மரணமடைந்தார்.
72 வயதான அவர் நெடு நாட்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மத்தியப் பிரதேசத்தில் குவாலியர் நகரில் வசித்து வந்தஅவருக்கு நல்ல சிகிச்சை அளிப்பதற்காக சமீபத்தில் டெல்லிக்கு அழைத்து வந்தார் வாஜ்பாய்.
டெல்லி அகில இந்திய மருத்து அறிவியல் கழகத்தில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்றுகாலை அவர் இறந்தார். சகோதரியின் மரணம் குறித்து அறிந்தவுடன் வாஜ்பாய் மருத்துவமனைக்கு விரைந்தார்.
ஊர்மிளாவின் உடல் தகனம் குவாலியருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடல் தகனம் அங்கு நடக்கவுள்ளது.
ஊர்மிளா மிஸ்ராவின் மறைவுக்கு பிரதமர் வாஜ்பாய்க்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.


