சென்னையில் ரூ.65 லட்சம் மதிப்பு போலி அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள போலி அமெரிக்க டாலர்களைப் போலீசார் பறிமுதல்செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடு செல்பவர்களுக்காகவே போலி அமெரிக்க டாலர்களை ஒரு கும்பல் அச்சடித்துவிநியோகம் செய்து வருவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சென்னையில் உள்ளவண்ணாரப்பேட்டையில்தான் இந்தப் போலி அமெரிக்க டாலர்கள் விநியோகம்செய்யப்படுவதாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து வெளிநாடு செல்வதாகக் கூறிக் கொண்டு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்வண்ணாரப்பேட்டை தங்கசாலையில் உள்ள குறிப்பிட்ட அந்த வீட்டிற்குச் சென்றார்.
தான் வெளிநாடு செல்லவிருப்பதாகவும் அதற்காக அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாகவும்அங்கு உள்ளவர்களிடம் அந்த இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். உடனே அவருக்கு 2,000அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன.
அப்போது அந்த வீட்டைச் சுற்றிலும் மறைந்து நின்று கொண்டிருந்த போலீசார் உடனே அதிரடியாகவீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நாராயண ராவ் மற்றும் அவருடைய ஏஜென்ட் இளங்கோவன்ஆகிய 2 பேரைக் கைது செய்தனர்.
அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.65 லட்சம் மதிப்புள்ள போலி அமெரிக்கடாலர்களையும் போலீசார் கைப்பற்றினர்.
ராஜபாளையத்தைச் சேர்ந்த நாராயண ராவ் கடந்த 15 ஆண்டுகளாக போலி அமெரிக்க டாலர்களைஅச்சடித்து விநியோகித்து வந்ததாக விசாரணையின்போது தெரிய வந்தது. இவ்வாறு அவர் பலகோடி ரூபாய் வரை சேர்த்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவருடைய சொத்து மற்றும் வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடத்துவதற்காகராஜபாளையத்திற்குத் தனிப் போலீஸ் படை விரைந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


