• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திமுக முன்னாள் அமைச்சர் த.கிருட்டிணன் படுகொலை: கருணாநிதி அதிர்ச்சி- மதுரையில் பதற்றம்

By Staff
|

மதுரை:

Tha. Kiruttinanதிமுக முன்னாள் அமைச்சர் த.கிருட்டிணன் இன்று காலை அவர் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் கொம்புக்கரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தா.கிருட்டிணன். கடந்த திமுக ஆட்சியில்நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர். இவரது வீடு மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ளது. இன்று காலைதனது வீட்டின் அருகே அவர் படுகொலை செய்யப்பட்டார்.

திமுகவின் உட்கட்சித் தேர்தல்கள் கடும் மோதல்களுடன் நடந்து முடிந்துள்ளன. மதுரையில் அழகிரி கோஷ்டியும்ஸ்டாலின் கோஷ்டியும் கட்சியின் முக்கியப் பொறுப்புகளைக் கைப்பற்ற கடும் போட்டி போட்டன. இதில் அடிதடி,வெட்டு குத்தும் விழுந்தது.

இதில் த.கிருட்டிணன், ஸ்டாலின் கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அழகிரிகோஷ்டியின் தீவிரமான எதிர்ப்பைச் சந்தித்து வந்தார்.

மதுரை நகர் மாவட்ட மற்றும் சிவகங்கை மாவட்ட திமுக பொறுப்பாளராக இவர் இருந்தார். சிவங்கை மாவட்டச்செயலாளராகவும் இருந்தார். மதுரை மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்தார். இதனால் இந்த இருமாவட்டங்களிலும் அழகிரி கோஷ்டிக்கு செக் வைக்க இவரைத் தான் ஸ்டாலின் பயன்படுத்தி வந்தார்.

இந் நிலையில் இன்று காலை 6 மணியளவில் மதுரை கே.கே. நகரில் உள்ள தனது வீட்டின் வெளியே அவர்வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். அப்போது திடீரென த.கிருட்டிணனின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்துஅவரது வீட்டினர் வெளியே ஓடி வந்துப் பார்த்தனர்.

அப்போது கிருட்டிணன் மண்டையில் வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் ரோட்டில் கிடந்து துடித்துக்கொண்டிருந்தார். இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

இவரது வீட்டின் பின் பக்கம் ஒரு தெருவில் மறைந்திருந்த இருவர் த.கிருட்டிணன் தனது வீட்டை நெருங்கியபோதுஅரிவாளால் கழுத்திலும், தோள்பட்டையிலும், மண்டையிலும் வெட்டிவிட்டு ஓடியதாக சம்பவத்தை நேரில்பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர். மொத்தம் 9 இடங்களில் அவர் வெட்டப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்ததும் மதுரை நகர மேயர் செ.ராமச்சந்திரன் (இவரும் ஸ்டாலின் ஆதரவாளர்),கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கிருட்டிணனின் வீட்டுக்கு விரைந்தனர். அதே போலஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும் அவரது சமூகத்தினரும் கே.கே. நகர் பகுதியில் கூடினர். சொந்த ஊரானசிவகங்கையில் இருந்தும் ஆயிரக்கணக்கான திமுகவினர் மதுரையில் குவிந்துள்ளனர். இதனால் அப் பகுதியில்பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மதுரை முழுவதும் பல பகுதிகளிலும் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து மதுரை கமிஷ்னர் கந்தசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் நகர் முழுவதும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருட்டிணனின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிந்து அவரது உடல் சொந்த ஊரானசிவகங்கை மாவட்டம் கொம்புக்காரநேந்தலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தா.கி. என்று திமுகவினரால் அன்புடன் அழைக்கப்பட்டவர் தா.கிருட்டிணன். 2 முறை மக்களவை எம்.பியாகவும்ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர்.

கடந்த 1996ம் ஆண்டு சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கருணாநிதி தலைமையிலானஅமைச்சரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். இவர் அமைச்சராக இருந்தபோது தான்சென்னை நகரில் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன. மாநிலம் முழுவதிலும் கிராமங்களில் சிமென்ட் சாலைகள்போடப்பட்டன.

சென்னை நகரில் பாலங்கள் கட்டியதில் ஊழல் ஏற்பட்டதாக கூறி ஜெயலலிதா அரசு வழக்குப் பதிவு செய்தது. இந்தவழக்கில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது தா.கிருட்டிணனனும் கைது செய்யப்பட்டார்.

கொல்லப்பட்ட கிருட்டிணனுக்கு வயது 66. மனைவியுடன் மதுரையில் வசித்து வந்தார். இவரது மகன்அமெரிக்காவில் உள்ளார். மகள் சென்னையில் உள்ளார். இவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகநெருக்கமானவராவார்.

இந்தக் கொலை குறித்து மதுரை அண்ணா நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு கருணாநிதியுடன் பேசினார்:

தா.கிருட்டிணனின் மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார். அவர்இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், தா.கிருட்டிணனின் கொலை எனக்கு பெரும் அதிர்ச்சியைக்கொடுத்துள்ளது. அவர் இப்போது உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்பக் கூட முடியவில்லை.

இந்த மரணத்துக்கு ஆறுதல் சொல்லும் அளவுக்கு எனக்கே மன தைரியம் இல்லை. நான் துடிதுடித்துப்போயுள்ளேன்.

நேற்றிரவு தான் மதுரைப் பகுதி உட் கட்சித் தேர்தல் விவகாரம் குறித்து நான் அவருடன் தொலைபேசியில்பேசினேன். இண்டு நாட்களுக்கு முன் தனது பிறந்த நாளையொட்டி என்னை நேரில் வந்து சந்தித்து வாழ்த்துபெற்றுவிட்டுச் சென்றார்.

கிருட்டிணனின் மறைவு எனக்கும் திமுகவுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று கூறியுள்ளார்.

பிரதமர் இரங்கல்:

த.கிருட்டிணனின் மறைவுக்கு பிரதமர் வாஜ்பாய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மூலமாக இச் செய்தியை அறிந்த வாஜ்பாய், திமுக தலைவர் கருணாநிதிக்கு தனதுஇரங்கல் செய்தியை அனுப்பினார்.

3 நாள் இரங்கல்:

இதற்கிடையே திமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று நாட்கள் மாநிலம் முழுவதும் திமுககொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். மறைந்த கிருட்டிணனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுகநிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X