For Daily Alerts
Just In
கைதிகளின் ஊதியத்தை மணியார்டர் செய்த சிறை ஆசிரியர் சஸ்பெண்ட்
கோவை:
கைதிகளிடமிருந்து பணம் பெற்று அதை அவர்களது உறவினர்களுக்கு அனுப்பிய கோவை மத்திய சிறையில்கைதிகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவை மத்திய சிறையில் ஆசிரியராக இருப்பவர் சக்திவேல். இவர் மீது பல்வேறு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து சிறை நிர்வாகம் இவரைக் கண்காணித்து வந்தது.
இந் நிலையில் கைதிகளுக்கு சிறையில் வழங்கப்படும் ஊதியத்தை அவர்களது உறவினர்களுக்கு சக்திவேல் மணிஆர்டர் மூலம் அனுப்பி வந்தது தெரியவந்தது. சிறை விதிகளின்படி கைதிகள் தங்கள் ஊதியத்தை பணத்தைவெளியே அனுப்புவது தவறாகும்.
இதையடுத்து சக்திவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது விசாரணை நடத்த சிறை கண்காணிப்பாளர்ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.


