இன்று ஏற்காட்டில் கோடை விழா தொடக்கம்
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று கோடை விழா தொடங்குகிறது.
ஊட்டி, கொடைக்கானல் வரிசையில், சேலம் மாவட்டம் ஏற்காடு மலையும் மிக முக்கியமானசுற்றுலாத் தலமாகும். சமீப காலமாகத் தான் இந்த சுற்றுலாத்தலம் அதிக பிரபலமாகி வருகிறது.
இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக இங்கும் கோடை விழா அரசு சார்பில் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான சீசன் தற்போது ஏற்காட்டில் தொடங்கியுள்ளது. இதைத் சுற்றுலாப் பயணிகள்குவிந்து வருகின்றனர்.
இன்று தொடங்கும் கோடை விழாவை சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை துவக்கி வைக்கிறார்.விவசாயத்துறை அமைச்சர் ஜீவானந்தம் மலர்க் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். ஊராட்சித்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தைத் திறந்து வைக்கிறார்.
சுற்றுலாத் துறை அமைச்சர் மில்லர், பொருட்காட்சிகளைத் தொடங்கிவைக்கிறார்.
கோடை விழாவையொட்டி ஏற்காடிற்கு சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


