ராணி மேரி கல்லூரி: டி.ஆர்.பாலு உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை
சென்னை:
கடலோரப் பகுதிகளில் ரூ. 5 கோடிக்கு மேலான மதிப்பில் கட்டடம் கட்டவும், பழமை வாய்ந்தகட்டடங்களை இடிக்கவும் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்று மத்தியசுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு வெளியிட்ட உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டு அங்கு தலைமைச் செயலகம் கட்டும் முதல்வர்ஜெயலலிதாவின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சரானடி.ஆர்.பாலு தனது அமைச்சகத்தின் மூலம் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அதில், கடலோரப் பகுதிகளில் உள்ள பழமையான கட்டிடங்களை இடிக்கக் கூடாது, ரூ. 5 கோடிக்குமேற்பட்ட கட்டுமானப் பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெறவேண்டு என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் ராணி மேரிக் கல்லூரியை இடிக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.
இதைத் தொடர்ந்து சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா டி.ஆர்.பாலுவை கடுமையாக விமர்சித்தார்.அவர் பதவியில் நீடிக்கவே தகுதியற்றவர் என்றார்.
இந் நிலையில் பாலுவின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத்தொடரப்பட்டது. மேலும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் தமிழகஅரசும் வழக்குத் தொடர்ந்தது.
சி.எம்.டி.ஏ. தாக்கல் செய்த மனுவில், ராணி மேரிக் கல்லூரி விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ள நிலையில், திடீரென்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இந்த உத்தரவைப்பிறப்பித்துள்ளது. இது சட்டத்திற்குப் புறம்பானது. இச் சட்டம் செல்லாது.
அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரம், அதைஆதரித்து சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்தது ஆகியவற்றைப் பார்க்கும்போது, தமிழகஅரசுக்கு எதிராக உள்நோக்கத்துடனேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.
இது மத்திய அரசின் உத்தரவு அல்ல, மாறாக அமைச்சர் டி.ஆர். பாலுவின் தனிப்பட்டஉத்தரவாகவே கருதப்பட வேண்டும். பொது அறிவிப்பு இல்லாமல் இந்த உத்தரவுவெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால் கடலோர மாநிலங்கள் அனைத்தும் கடுமையாகபாதிக்கப்படும்.
ராணி மேரிக் கல்லூரியை மட்டும் மனதில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில்பொது நலனை கருத்தில் கொள்ள அமைச்சர் தவறிவிட்டார்.
சட்ட அங்கீகாரம் இல்லாத இந்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று அதில்குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி சதாசிவம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவுக்கு வரும் ஜூன்25ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்தார். இது தொடர்பாக விளக்கம் தருமாறு மத்தியஅரசுக்கும், அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கும் உதரவிட்டார்.
மேலும் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, இந்த வழக்கை ராணிமேரிக் கல்லூரி இடிப்பைத் தடுக்கக் கோரும் வழக்கோடு சேர்க்கவும், அந்த வழக்கை விசாரித்துவரும் முதல் டிவிஷன் பெஞ்சுக்கு இந்த வழக்கை மாற்றவும் உத்தரவிட்டார்.


