For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு: ராமதாஸ் ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொருளாதாரரீதியில் பின் தங்கிய முற்பட்ட இனத்தினருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடுவழங்கலாம் என பாட்டாளி மக்கள் கட்சி கூறியுள்ளது..

முற்பட்ட இனத்தினருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவோம் என சமீபத்தில் பா.ஜ.க. அறிவித்தது. இதை பா.ம.க.ஆதரித்துள்ளது. அதே நேரத்தில் முற்பட்டவர்களுக்குத் தரப்படும் ஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டமற்றும் பழங்குடி இனத்தினரின் இட ஒதுக்கீடு எந்த வகையில் பாதிக்கப்படக் கூடாது எனவும் பா.ம.க.கூறியுள்ளது.

இது குறித்து டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

பொருளாதார அடிப்படையில் முற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தர அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

முற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தருகிறோம் என்று சொல்லி பிற்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும்அனுபவித்து வரும் ஒதுக்கீட்டில் கையை வைத்தால் அதை அனுமதிக்க மாட்டோம்.

சரியாகச் சொன்னால் ஒவ்வொரு ஜாதிக்கும் அவர்களது ஜனத் தொகையை வைத்துத் தான் இட ஒதுக்கீடு தரப்படவேண்டும். அதைச் செய்தால் உண்மையான சமூக நீதி கிடைத்தது போலாகும்.

ஜெ. முன்னேற்றக் கழகம்:

ஜெயலலிதா முன்னேற்றக் கழக அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இரண்டு ஆண்டுகளில்ஏதோ உலக சாதனையே படைத்துவிட்டது மாதிரி பத்திரிக்கைகளில் பக்கத்துக்குப் பக்கம் விளம்பரம் தருகிறதுஅரசு. டைம்ஸ் ஆப் இந்தியாவில் 4 பக்க விளம்பரத்தில் அரசின் சாதனைகளாக என்னென்வோபட்டியலிட்டுள்ளார்கள்.

அப்படி என்ன சாதித்துவிட்டது ஜெயலலிதா முன்னேற்றக் கழக அரசு. விவசாயிக்கு ஏதாவது நல்லதுசெய்தார்களா? படித்தவர்களுக்கு வேலை தந்தார்களா? ஊழலை கிள்ளி எறிந்துவிட்டார்களா? தொழிற்சாலைகளைஉருவாக்கினார்களா? ஆடம்பரத்தைக் குறைத்தார்களா?

மின் கட்டணம், ரேசன் அரிசி, பஸ் கட்டணத்தை உயர்த்தினார்கள். முதியோர் பென்சனை நிறுத்தினார்கள்.

10ம் வகுப்பே போதுமான போலீஸ் வேலைக்கு பி.இ.. எம்.டெக் படித்தவர்கள் வந்து வரிசையில் நிற்கிறார்கள்.இவை தானே ஜெயலலிதாவின் சாதனை. தமிழகத்தில் வேலை வேண்டி காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை51 லட்சம். இந்த புள்ளி விவரத்தையாவது ஜெயலலிதா என்றாவது பார்த்திருப்பாரா?

காண்ட்ராக்ட், இடைத் தரகு என கோடிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இது தானே ஜெயலலிதாவின் சாதனை.

தமிழக அரசின் நிதி நிலைமை சரியில்லை என்று இரண்டு ஆண்டு காலமாகக் கூறி வந்த முதல்வர் ஜெயலலிதாஇப்போது திடீரென நிலைமை சரியாகிவிட்டதாகக் கூறுகிறார். இது உண்மையெனில் நிதித் தட்டுப்பாட்டால் அரசுப்பணிக்கு ஆள் சேர்ப்பதில்லை என்ற உத்தரவை ஜெயலலிதா உடனே வாபஸ் பெற வேண்டும்.

அரசுப் பணியாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட சலுகைகளைத் திரும்பத் தர வேண்டும். தமிழகத்தின் நிதி நிலவரம்என்ன என்பது குறித்து ஜெயலலிதா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

சென்னை நகர ஏரிகளில் நீரைப் பெற செயற்கை மழை பெய்ய வைக்க முயற்சி எடுக்கப் போவதாகஜெயலலிதா கூறுவது மக்களை திசை திருப்பும் செயல். இந்த முயற்சி பலன் தராது, கோடிகள்தான்வீணாகும்.

செயற்கை மழை என்பது உலக அளவில் தோல்வியடைந்த திட்டம். மேகங்களே இல்லாத நிலையில்இவர்கள் எங்கிருந்து மழையைக் கொண்டு வரப் போகிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய்தான்வீணாகப் போகிறது.

வீராணம் திட்டம் என்ற பெயரில் ஏற்கனவே கோடிக்கணக்கான ரூபாயை அரசு வீண்டித்துக்கொண்டுள்ளது. அந்த நிலைதான் செயற்கை மழைக்கும் ஏற்படும்.

முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாக வரும்செய்திகளை தட்டிக் கழித்துவிட முடியாது. அரசியல் கலப்பில்லாமல், பாரபட்சமின்றி இந்த வழக்குவிசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்.

தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளுக்கு சாதகமாகவே அதிமுக அரசு செயல்படுகிறது.இதனால் பாதிக்கப்படப் போவது ஏழை மாணவர்கள்தான். ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்குரிய இட ஒதுக்கீடு முறையை தனியார் பொறியியல் கல்லூரிகள் முறையாகக்கடைப்பிடிக்கின்றனவா என்பதை உறுதி செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

மதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் தனது உதவியாளர் மீதான ஊழல் புகார் காரணமாக பதவிவிலகியது வரவேற்கத்தக்கது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நினைத்திருந்தால் இந்த விவகாரத்தையேமுழுமையாக மறைத்திருக்க முடியும். ஆனால், நேர்மையான கூட்டணிக் கட்சிகளால் நடத்தப்படும் அரசு இதுஎன்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X