For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விதிகளை மீறி ஸ்ரீதேவி கட்டிய அடுக்குமாடி கட்டடத்தில் விரிசல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் விதிகளை மீறி நடிகை ஸ்ரீதேவியும் இன்னொரு நிறுவனமும் கட்டிய 8 மாடிக்கட்டடத்தின் தூண்டி இடிந்து விழுந்தது. எந்த நேரத்திலும் முழுக் கட்டடமும் இடிந்து விழும்நிலையில் உள்ளது.

தரைதளத்திற்கு மேல் மூன்று அடுக்கு மாடிகள் மட்டுமே கட்ட வேண்டிய இடத்தில் எட்டு மாடிகள்கட்ட அனுமதிக் கொடுத்தது தான் இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

ஸ்ரீதேவி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகாரிகளிடம் இதற்கு அனுமதி வாங்கியுள்ளதாகத்தெரிகிறது.

சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனி பிஷப் வாலர்ஸ் அவினியூவில் நடிகை ஸ்ரீதேவியின் வீடுஉள்ளது.

இதன் எதிர்புறத்தில் உள்ள இடத்தை வாங்கிய ஸ்ரீதேவி இரு ஆண்டுகளுக்கு முன் கமல்சந்த் ,பிரகாஷ் சந்த் என்ற மார்வாடிகளுக்குச் சொந்தமான சாந்தி பில்டர்ஸ் என்ற நிறுவனத்துடன்இணைந்து அடுக்குமாடி குடியிருப்பை கட்ட ஆரம்பித்தார்.

அதே நேரத்தில் ஸ்ரீதேவியின் வீட்டையும் புதுப்பிக்கும் வேலைகளும் தொடங்கின.

சாலை விதிகளின்படி இந்தப் பகுதியில் தரைதளத்தையும் சேர்த்து 4 மாடிக் கட்டடம் மட்டுமே கட்டமுடியும். அதற்கு மேல் இந்தப் பகுதியில் உயரமான கட்டங்கள் கட்ட சி.எம்.டி.ஏ. (சென்னைபெருநகர வளர்ச்சிக் குழுமம்) விதிகள் தடை செய்கிறது.

ஆனால், ஸ்ரீதேவியும் கமல்சந்த், பிரகாஷ் சந்த்தும் இணைந்து எட்டு அடுக்கு மாடியை கட்டஆரம்பித்தனர்.

இதற்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் எப்படி அனுமதி அளித்தார்கள் என்று தெரியவில்லை.

தனது செல்வாக்கைப் பயன்படுத்தியும், கவனிக்கும் விதத்தில் கவனித்தும் அதிகாரிகளை ஸ்ரீதேவிசரிகட்டிவிட்டதாகத் தெரிகிறது.

விதிமுறைகளை மீறி கட்டிவிட்டு பின்னர் வரைமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் (ரெகுலரைசேஷன்)அபராதம் செலுத்திவிட்டனர் ஸ்ரீதேவியும் சாந்தி பில்டர்ஸ் தரப்பினரும். இதற்கான ஐடியாவையும்சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் தான் தந்திருக்க வேண்டும்.

அபராதம் கட்டியதால் 8 மாடிகள் கட்ட அவர்களுக்கு அனுமதி கிடைத்துவிட்டது. ஒவ்வொருதளத்திலும் இரண்டு வீடுகளாக மொத்தம் 16 பிரம்மாண்டமான பிளாட்களுடன் இந்தக் கட்டடம்உருவானது.

ஒரு பிளாட்டும் ரூ. 50 லட்சத்துக்கும் மேல் விற்கப்பட்டன. அதே நேரத்தில் கட்டடப் பணிகளும்தொடர்ந்து கொண்டு தான் உள்ளன.

இந்நிலையில், இந்தக் கட்டத்தின் முக்கியத் தூண் பயங்கர சத்தத்துடன் விரிசல் விட்டது. அதிலிருந்தசிமென்ட் கலவை பெயர்ந்து விழுந்தது. அதிலிருந்த கம்பிகள் நொறுங்கி வளைந்தன.

இந்த மாபெரும் தூண் சரிந்தபோது அருகில் இருந்த வீடுகளும் சேர்ந்து ஆடின. தெருவில்நின்றிருந்த வாகனங்கள் அதிர்ந்தன. பயங்கர சத்தமும் எழுந்தது.

நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதிய இந்த பிளாட்வாசிகளும் அக்கம் பக்கத்து வீட்டினரும்வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

தீயணைப்புத்துறை மற்றும் போலீஸாருக்கு சிலர் தகவல் கொடுத்தனர். போலீஸாரும்வரவழைக்கப்பட்டனர்.

கட்டிடத்துக்கு சி.எம்.டி.ஏ. அனுமதி இருக்கிறதா என்பதை போலீஸார் சரிபார்த்தனர். அப்போதுமுதலில் 8 மாடியைக் கட்டிவிட்டு பின்னர் அபராதம் கட்டி அனுமதியே வாங்கப்பட்டது அப் பகுதிமக்களுக்குத் தெரியவந்தது.

இதையடுத்து அப் பகுதி மக்கள் மாநகராட்சி கமிஷ்னர், போலீஸ் கமிஷ்னர் மற்றும் சி.எம்.டி.ஏ.அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் நொறுங்கிய தூண் மீது சிமெண்ட் கலவையைப் பூசி, மற்ற தூண்களுக்கு இரும்புமற்றும் சவுக்கு கட்டைகளால் முட்டு கட்டை கொடுத்துள்ளனர் ஸ்ரீதேவி மற்றும் சாந்தி பில்டர்ஸ்தரப்பினர்.

எப்போது இக் கட்டடம் இடிந்து விழுமோ என்று பயத்துடன் தான் இந்தப் பகுதியைக் கடந்துசெல்கின்றனர் இந்தத் தெருவாசிகள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X