வீரப்பனுக்குப் பணம்: கர்நாடக முன்னாள் டிஜிபியிடம் தமிழக போலீஸ் விசாரணை
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை மீட்க சந்தன கடத்தல் வீரப்பனுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து கர்நாடகமாநில முன்னாள் டி.ஜி.பி. தினகரிடம் தமிழக போலீஸார் விசாரணை நடத்தினர்.
இவரிடம் தமிழக போலீசார் நடத்தியுள்ள இரண்டாவது விசாரணை இதுவாகும்.
3 ஆண்டுகளுக்கு முன் நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்று பணயக் கைதியாக வைத்து இருந்த போது, அவரை மீட்க கோடிக் கணக்கில் பணம் கொடுக்கப் பட்டதாக அப்போது கர்நாடக மாநிலபோலீஸ் டி.ஜி.பி. ஆக இருந்து ஓய்வுபெற்ற தினகர் கூறி இருந்தார்.
வீரப்பன்ஸ் பிரைஸ் கேட்ச்- ராஜ்குமார் என்ற தலைபபில் புத்தகமாகவும் எழுதி வெளியிட்டு பரபரப்பைஏற்படுத்தினார். இந்தப் புத்தகத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து நக்கீரன் கோபாலைக் கைது செய்யமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இப்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனேவ இந்த போலீசார் தினகரைச்சந்தித்து சில விளக்கங்கள் கேட்டுவிட்டுச் சென்றனர். அப்போது கீழ் நிலை போலீசாரிடம் பேச மாட்டேன். மூத்தபதவியில் உள்ள அதிகாரிகள் வந்தால் தான் வாக்குமூலம் தருவேன் என்று கூறி தமிழக போலீசாரை தினகர்விரட்டிவிட்டார்.
இதையடுத்து நேற்று முன் தினம் இந்த நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி நாஞ்சில் குமாரன்தலைமையிலான தனிப்படை போலீஸார் பெங்களூர் வந்து தினகரிடம் விசாரணை நடத்தினார்கள். நேற்றும் இந்தவிசாரணை நீடித்ததாகத் தெரிகிறது.
இந்த விசாரணை விவரங்களை தெரிவிக்க தமிழக போலீஸார் மறுத்துவிட்டனர். இது குறித்து தினகரிடம் கேட்டபோது, வாக்குமூலம் கொடுத்தை ஒப்புக் கொண்டார். ஆனால், விவரம் தெரிவிக்க மறுத்தார்.
இந்த நிலையில் தினகருக்கும், மற்றொரு கர்நாடக முன்னாள் டி.ஜி.பி ஜார்ஜுக்கும் இடையே தகராறுஏற்பட்டுள்ளது. ஜார்ஜின் மனைவியோடு தினகருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மனைவியோடுசேர்ந்து தன்னை கொலை செய்ய தினகர் முயல்வதாக இந்திரா நகர் போலீஸில் ஜார்ஜ் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தினகர் கூறுகையில், தமிழ் நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸார் என்னிடம் வாக்குமூலம் வாங்கினால்முதல்வர் கிருஷ்ணா உள்பட பலரும் மாட்டுவார்கள், பல உண்மைகள் வெளிவந்துவிடும். இதனால் பயந்துபோய்என்னை ஏதாவது வழக்கில் மாட்டி சிறையில் அடைக்க கர்நாடக அரசு முயற்சி செய்கிறது. இதற்காகத் தான்ஜார்ஜைத் தூண்டிவிட்டு பொய் புகார் தரச் செய்துள்ளனர் என்றார்.
கர்நாடக முன்னாள் டிஜிபியாக இருந்த தினகர் ஒரு தமிழராவார். செங்கல்பட்டு மாவடத்தைச் சேர்ந்தவர். தனக்குடிஜிபி பதவி தர மறுத்ததற்காக அப்போதைய முதல்வர் ஜே.எச். படேல் மீதே வழக்குப் போட்டவர். வழக்கறிஞரானஇவர் இப்போது இன்னொரு முன்னாள் டிஜிபியின் மனைவியுடன் செக்ஸ் புகாரில் மாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


