• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஜய்காந்தும் ரஜினிகாந்தும்....

By Staff
|

சென்னை:

அரசியல் களம் காண அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக முடுக்கி விட்டு கரை வேட்டி கட்டத் தயாராகிவிட்டார் "கேப்டன்" விஜயகாந்த் என்கிறர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்..

ரஜினியைப் போலவே பல ஆண்டுகளாக அரசியல் பூச்சாண்டி காட்டி வருவபர் விஜய்காந்த்.

தனது ரசிகர் மன்றத்திற்கு தனிக் கொடியை அறிமுகப்படுத்தினார். அரசியல் பிரவேசத்திற்கு இது ஒரு முன்னோட்டம்என்றனர். அதன் பிறகு அவரது ஒவ்வொரு படத்திலும் அரசியல் நெடி தான் ஏறியதே தவிர உண்மையில் ஏதும்நடக்கவில்லை.

இப்போது தனது ரசிகர் மன்றத்தின் பெயரை மாற்றத் திட்டமிட்டுள்ளாராம். அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறதாம். வெறும் ரசிகர் மன்றமாக மட்டுமல்லாமல், கமல்ஹாசனைப் போல நற்பணி மன்றம் என பெயர்மாற்றம் இருக்குமாம்.

அதன் பிறகு ரசிகர் மன்றங்களின் பிரமாண்டமான மாநாட்டை மதுரை அல்லது சென்னையில் நடத்துவார்,அப்போது தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளிப்படையாக அறிவிக்க உள்ளார்என்கின்றார்கள்.

அரசியலில் நுழையலாம் என மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இருக்கும் அவரது ஆஸ்தான ஜோதிடரும்சாதகமாகவே குறி சொல்லி விட்டார், இதனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனிக்கட்சி கண்டுவிடுவார் கேப்டன் என்கிறார்கள்.

சமீப காலமாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று மைக் பிடித்து பேசி வருவது மக்களின் ரியாக்ஷனைஅறிவதற்காகத்தானாம். போகும் இடங்களிலெல்லாம் நல்ல கூட்டம் சேருவதால் தனக்கு நிச்சயம் தமிழகமக்களிடையே ஆதரவு இருக்கும் என்று உறுதியாக நம்புகிறார் என்கிறார்கள்.

தற்போதைய நிலையில் ரஜினிக்கு அடுத்தபடியாக விஜயகாந்த்திற்குத்தான் உறுதியான ரசிகர் வட்டாரம்இருப்பதாக போலீஸ் புலனாய்வுத்துறையின் புள்ளிவிவரம் கூறுகிறது.

மேலும், காங்கிரஸ் கட்சியின் சில முக்கியப் பிரமுகர்களும் விஜயகாந்த்தை அரசியலுக்கு இழுக்க முயற்சி செய்துவருவதாகவும், ஆனால் அவர்களை தன்னுடன் வருமாறு விஜயகாந்த் அழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நேற்று வேலூரில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில், அரசியலுக்கு நான் வர வேண்டும் என்று மக்களும்நினைக்கிறார்கள், ரசிகர்களும் விரும்புகிறார்கள். அவர்களது ஆசை நிச்சயம் நிறைவேறும்.

மற்றவர்களைப் போல உங்களை திசை திருப்ப மாட்டேன். நிச்சயம் நல்ல வழியில் கொண்டு செல்வேன். நான்நிச்சயம் அரசியலில் நுழைவேன். அதற்கு உங்களது ஆதரவு தேவை.

ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எனவேஆண்டவன் வழிகாட்டும்போது அரசியலில் குதிப்பேன். அப்போது உங்களது துணையுடன் சாதிப்பேன் என்றார்விஜயகாந்த்.

அதேபோல, ஆம்பூர் குறுக்குச் சாலையில் பேசும்போது, போலீஸார் சில நேரங்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகநடக்கிறார்கள். எனது கூட்டத்திற்கு மைக் கட்டக் கூடாது, மேடை அமைக்கக் கூடாது என்று கூறியுள்ளார்கள். அதுதவறு.

என்னை நம்பி வருகிறவர்களை நடுத் தெருவில் நிறுத்த மாட்டேன். நான் அரசியலுக்கு வர விரும்பினால் அதையாரும் தடுக்க முடியாது. வர வேண்டும் என்று இருந்தால் நிச்சயம் வருவேன் என்றார் அவர்.

ஒரு பக்கம் விஜய்காந்த் அரசியலுக்கு வரலாம் என்று பேச்சு இருந்தாலும், இன்னொரு பக்கம் அவரது சமீபத்தியபடங்கள் எதுவுமே சரியாக ஓடாததை சுட்டிக் காட்டி சிரிக்கிறார்கள், விஷயம் தெரிந்தவர்கள்.

தளர்ந்து போன தனது மார்க்கெட்டை நிமிர்த்தவும், தனது ரசிகர் கூட்டத்தை மீண்டும் உற்சாகத்துக்குக் கொண்டுவரவும் தான் விஜய்காந்த் இந்த பூச்சாண்டி காட்டுகிறார் என்கிறார்கள்.

ரஜினியை மாதிரியே இவரும் புலி வருது.. புலி வருது கதை தான் சொல்லிக் கொண்டிருப்பார். நிச்சயம்அரசியலுக்கு எல்லாம் வர மாட்டார். அதே நேரத்தில் தனது சினிமா செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ளவும்ரசிகர்களை எப்போதும் ஒரு எதிர்பார்ப்பில் வைத்திருக்கவும் தான் சமீப காலமாக மீண்டும தனது அரசியல்அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

இதற்காகத் தான் ரசிகர் மன்றப் பெயர் மாற்றமும், ரசிகர் மன்றத்தின் பிரம்மாண்டப் பேரணியும் எனகிறார்கள்.அந்தப் பேரணியில் ரஜினியைப் போலவே நான் நிச்சயம் வருவேன். ஆனா, எப்போன்னு எனக்கே தெரியாதுஎன்று தெளிவாக பேசுவாரே தவிர தடாலடி அறிவிப்பு ஏதும் வராது. தனிக் கட்சியும் பிறக்காது என்கிறார்கள்.

இந்த இருவரும் அரசியலுக்கு வருகிறார்களோ இல்லையோ, சண்டியர் பட விவகாரத்தில் அரசினாலும்அரசியல்வாதிகளாலும் தூண்டிவிடப்பட்டு செம கடுப்பில் இருக்கும் கமல்ஹாசன் உடாலங்கடியாக ஏதாவதுஅறிவிப்பு வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு சமீப காலமாக தமிழகத்தில் எழுந்துள்ளது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X