விவசாயப் புரட்சி!
கோயம்புத்தூர்:
தமிழகத்தில் விவசாயத்துறையின் வளர்ச்சியில் ஜெயலலிதாவின் மாபெரும் பங்காற்றியுள்ளதாகக் கூறி அவருக்குகெளரவ டாக்டர பட்டம் வழங்க கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு மற்றும் கல்வித் திட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 25ம் தேதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின்போது ஆளுநரும் பல்கலைக்கழகவேந்தருமான ராம்மோகன் ராவ், ஜெயலலிதாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவார்.
1991-96ம் ஆண்டுகளில் தமிழகத்தின் விவசாய வளர்ச்சி, ஊரக வளர்ச்சி, பெண்கள் மேம்பாடு ஆகியவற்றில்ஜெயலலிதா செய்த சாதனைகளை மனதில் கொண்டு அவருக்கு இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாகபல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் ராமசாமி இன்று தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் முயற்சிகளால் தான் தமிழகத்தின் உணவு உற்பத்தி 8.2 லட்சம்டன்களில் இருந்து 9.16 லட்சம் டன்களாக உயர்ந்தது என்றார் ராமசாமி.
மேலும் இந்த ஆட்சியிலும் விவசாயத்துறை மேம்பாட்டிலும், வறண்ட நில மேம்பாட்டிலும், மழை நீர்சேகரிப்பிலும், விவசாய குளங்களை பராமரிப்பதிலும், விவசாய ஏற்றுமதியைப் பெருக்குவதிலும் பலசாதனைகளை ஜெயலலிதா செய்து வருகிறார் என்றார் ராமசாமி.
ஆமா.. சாமி. ஆமா.. சாமி..
(கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, இதே கோவைவிவசாயப் பல்கலைக்கழக மாணவிகள் சென்ற பஸ் தான் தர்மபுரியில் வைத்து எரிக்கப்பட்டது. அதில் பலஅப்பாவி மாணவிகள் தீயில் வெந்து கரிக்கட்டையானார்கள் என்பது மிக அவசியமாய் நினைவுகூறத்தக்கது)


