For Daily Alerts
Just In
திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி: இல.கணேசன்
கரூர்:
திமுகவுடனோ அல்லது அதிமுகவுடனோ கூட்டணி வைப்பது குறித்து பா.ஜ.க. எந்த முடிவும் எடுக்கவில்லை என்றுஅகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல் கூட்டணிக்கு இப்போது அவசரம் இல்லை.திமுகவுடனோ அல்லது அதிமுகவுடனோ கூட்டணி வைப்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்.நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பா.ஜ.க. அதிக இடங்களில் போட்டியிடும்.
அயோத்தி பிரச்சினை தீருவதற்காக காஞ்சி சங்கராச்சாயாரும், மத்திய அமைச்சர்களும் தீவிர முயற்சிமேற்கொண்டுள்ளனர். இந்த முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். விரைவிலேயே இப்பிரச்சினை சுமூகமாகதீர்க்கப்பட்டு விடும் என்றார்.


