For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பா.ஜ.க. தொழிலதிபரால் நிர்வாண படம் எடுக்கப்பட்ட பெண்: உயிருக்கு பாதுகாப்பு கேட்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

Chitraகோயம்புத்தூரில் பா.ஜ.கவைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னி கிருஷ்ணனால் கற்பழிக்கப்பட்டு, வீடியோஎடுக்கப்பட்ட அப்பாவிப் பெண்ணான சித்ரா, இந்த வழக்கை மூடி மறைக்க நிறைய பணம் கைமாறி இருப்பதாகக்குற்றம் சாட்டியுள்ளார்.

குடும்பப் பெண்ணான சித்ராவை கோவையைச் சேர்ந்த தொழிலதிபரும் பா.ஜ.க. பிரமுகருமான உன்னி கிருஷ்ணன்ஏமாற்றி அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து மானபங்கப்படுத்தினார். இதற்கு நர்ஸ் ஆலிக்ஸ் என்பவரும்உடந்தையாக இருந்தார்.

இதையடுத்து ஆலிக்சும், உன்னி கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஆலிக்ஸ் பலதிடுக்கிடும் தகவல்களைத் தந்தார். கற்பழிக்கப்பட்ட சித்ராவை நிர்வாணமாக வீடியோவில் பதிவு செய்ததையும்,உன்னி கிருஷ்ணன் அவரை அனுபவிப்பதைப் படம் எடுத்ததையும் போலீசாரிடம் ஒப்புக் கொண்டார்.

மேலும் அதை ஆபாச சிடிக்களாக மாற்றி, பிரிண்டுகள் போட்டு பலருக்கும் விற்றுள்ளதாகவும் தெரிகிறது.

இதையடுத்து உன்னியின் வீட்டில் ரெய்ட் நடத்திய போலீசார் ஆபாசப் படங்கள், சிடிக்கள், கேரமாக்கள், கார்ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து உன்னியைக் காப்பாற்ற கோவையைச் சேர்ந்த அக்ஷயா ஆறுமுகம் உள்ளிட்ட பா.ஜ.க.பெருந்தலைகள் இறங்கியுள்ளன. போலீசாரின் அதிரடி ஆக்ஷனைக் கண்டு முதல்ல் ஒதுங்கிக் கொண்ட இவர்கள்மீண்டும் இப்போது களத்தில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

உன்னியைக் காப்பாற்ற ஏகப்பட்ட பணம் செலவிடப்பட்டு வருவதாகவும் முக்கிய அதிகாரிகளை வளைக்க முயற்சிநடப்பதாகவும் சித்ரா தரப்பில் குற்றம் சாட்டப்பபடுகிறது.

இந் வழக்குத் தொடர்பாக கோவை இரண்டாவது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் சித்ரா ரகசிய வாக்குமூலம்தந்தார். பின்னர் அவரது கணவரும் வாக்குமூலம் தந்தார்.

இதையடுத்து வெளியே வந்த சித்ரவை நிருபர்கள் சூழ்ந்தனர். அப்போது அழுதுகொண்டே சித்ரா கூறியதாவது:

Chitraநடந்த விபரத்தை முழுமையாக அனைவரிடமும் சொல்லி விட்டேன். ஆனால், இதில் இருந்து உன்னிகிருஷ்ணனைக் காப்பாற்ற முயற்சி நடக்கிறது. இதற்காக ஏராளமான பணத்தை செலவு செய்து வருகின்றனர்.

பொய் சாட்சிகளை உருவாக்கவும் முயற்சி நடக்கிறது. என்னிடம் பண பலம் இல்லை. உன்னி கிருஷ்ணனுக்கு பணபலமும் அரசியல் பின்னணியும் உள்ளது. இதனால் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.

எனக்கும் என் கணவருக்கும் கொலை மிரட்டலும் வருகிறது. இதனால் முதல்வரிடம் பாதுகாப்பு கேட்டு மனுகொடுக்க உள்ளேன். எனக்கு நேர்ந்த கொடுமை எந்த அப்பாவிப் பெண்ணுக்கும் நடந்துவிடக் கூடாது என்றார்சித்ரா.

பேசிக் கொண்டே இருந்தவர் அழுதபடியே மயங்கிச் சரிந்தார். இதையடுத்து அவரை உறவினர்களும் போலீசாரும்தாங்கிப் பிடித்தனர்.

பின்னர் போலீஸ் வேனிலேயே அவர் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சித்ரா மனு அனுப்பியுள்ளதாகத்தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X