For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரதட்சணை கொடுமை: 2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

1 லட்சம் ரூபாய் வரதட்சணைப் பணத்தை பெற்றோரால் கொடுக்க இயலாததால், கணவர் வீட்டாருக்குப் பயந்துதனது இரண்டு குழந்தைகளைக் கொன்ற பெண் தானும் தற்கொலைக்கு முயன்றார்.

சென்னை, மடுவங்கரை பகுதியைச் சேர்ந்தவர் கெளரி. இவருக்கும், திருச்செந்தூரைச் சேர்ந்த வேல்பாண்டியன்என்ற சுந்தரத்திற்கும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரம்யா என்ற மகளும்,சத்யநாராயணன் என்ற மகனும் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் திருப்பூரில் குடிபுகுந்தனர். சில மாதங்களுக்கு முன் சொந்தத் தொழில் செய்யமுடிவெடுத்த சுந்தரம், இதற்கு ரூ. 1 லட்சம் பணம் தேவைப்படுவதாகவும், திருமணத்தின்போது வரதட்சணைகொடுக்காத காரணத்தால், அந்தப் பணத்தை உனது பெற்றோரிடம் இப்போது போய் கேட்டு வாங்கி வா என்றுமனைவியிடம் கூறியுள்ளார்.

இத்தனை காலத்திற்குப் பிறகு இப்போது போய் எப்படி வரதட்சணை கேட்பது என்று கூறி கெளரி மறுத்துள்ளார்.இதனால் சுந்தரம் கொடுமைப்படுத்தத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பெற்றோரைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார் கெளரி. ஆனால், அவர்களால் பணம் தரமுடியவில்லை. மருமகனின் கொடுமைக்கு உள்ளாகும் மகளை, பணத்தைப் புரட்டித் தரும் வரை, தங்களுடனேயேவைத்துக் கொள்ள முடிவு செய்தனர்.

இதற்காக திருப்பூர் வந்த கெளரியின் பெற்றோர் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். ஆனாலும்அவர்களால் பணத்தை தயார் செய்ய இயலவில்லை. இதனால் கெளரி மனம் வெறுத்தார்.

பெற்றவர்களால் பணம் தர முடியவில்லை, பணம் இல்லாமல் கணவன் வீட்டுக்குச் செல்ல முடியாது என்றுஅவஸ்தைப்பட்ட அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.

நேற்று காலை வெளியில் சென்றிருந்த கெளரியின் தாயார் ராஜலட்சுமி வீட்டுக்குத் திரும்பி கதவைத் தட்டினார்.

ஆனால், உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து சாவி துவாரம் வழியாக பார்த்தபோது, உள்ளேமகளும், பேரக் குழந்தைகளும் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ந்து போய் குரல் கொடுத்தார்.

அக்கம் பக்கத்து வீட்டினர் திரண்டு வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

மூச்சு முட்டிய நிலையில் இருந்த கெளரியையும் குழந்தைகளையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் குழந்கைள் இருவரும் இறந்து விட்டனர்.

உயிருக்குப் போராடிய கெளரி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுந்தரம் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கும், கெளரி மீது குழந்தைகளைக் கொலை செய்தது மற்றும்தற்கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுந்தரம் கைது செய்யப்படவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X