துப்பாக்கியுடன் விமானத்தில் ஏறிய தமிழக அதிகாரி பிடிபட்டார்
சென்னை:
குண்டுகள் நிரப்பட்ட துப்பாக்கியுடன் டெல்லி விமானத்தில் ஏற முயன்ற தமிழக அரசு அதிகாரியை சென்னைவிமான நிலைய பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர்.
தமிழக அரசின் குடும்ப நலத்துறையின் நிர்வாக இயக்குனராக இருப்பவர் அலோக்ராய். இவர் டெல்லி செல்லஇன்று காலை 6.30 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார்.
விமான நிலையத்தில் அவர் கொண்டு வந்த சூட்கேஸை விமான நிலைய பாதுகாப்புப் படையினர்சோதனையிட்டபோது ஒரு கைத் துப்பாக்கி இருந்தது. துப்பாக்கியில் 6 குண்டுகளும் நிரப்பப்பட்டிருந்தன.
இதையடுத்து அவரை விமானத்தில் ஏற விடாமல் அதிகாரிகள் தடுத்தனர். தனி அறைக்குக் கொண்டு செல்லப்பட்டஅவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது முதலில் இது தனு அப்பாவின் துபபாக்கி என்று கூறியவர் பின்னர் தன்னுடையது என்று முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். மேலும் துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருக்கிறதா என்ற கேள்விக்கும் குழப்பமானபதில்களை அளித்தார்.
இதையடுத்து அவரை விமான நிலைய அதிகாரிகள் அருகில் உள்ள மீனம்பாக்கம் காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் 3 பேர் கொண்ட போலீஸ் குழு அலோக் ராயிடம்விசாரணை நடத்தி வருகின்றனர்.


