கழுதைக்கு கோக், பெப்சிக்கு பாடை...
சென்னை:
கோக் மற்றும் பெப்சிக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவருகின்றன.
|
கரூரில் கோக் குடித்தால் பாடை தான் என்று சொல்லி நடத்தப்பட்ட நூதன நாடகம்
கரூர் பகுதியில் பெப்சி சாப்பிட்டு ஒருவர் பிணமானது போலவும், அவரை பாடையில் படுக்க வைத்தும், தாரை-தப்பட்டை அடித்தும் நூதனமான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.
சில இடங்களில் கழுதைகளுக்கு பெப்சியைக் குடிக்க வைத்தும் போராட்டம் நடந்தது.
சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள விற்பனையாளர்கள் பலர் பெப்சி, கோக்குக்குத் தடை வரலாம் என்றசந்தேகத்தில் தங்களிடமிருக்கும் பெப்சி, கோக் ஆகியவற்றை சாலையில் பிளாட்பாரத்தில் வைத்து எந்தவிலைக்கும் எடுத்துச் செல்லலாம் என்று கூறி வந்த வரை லாபம் பார்த்தனர். இதனால் வழக்கமாக ரூ. 12க்குவிற்கப்படும் பெப்சியும் கோக்கும் ரூ. 5க்கும், ரூ. 2க்கும் விற்கப்பட்டன.
|
மதுரையில் முள் புதரில் குவித்து வைக்கப்பட்டுள்ள பெப்சி பாட்டில்கள்
தமிழகம் முழுவதிலும் பெப்சி, கோக் ஆகியவற்றிற்கு எதிரான மன நிலை விஸ்வரூபமெடுத்து வருகிறது.
இருப்பினும் இவற்றில் போலி குளிர்பானங்கள், ஆரோக்கியமற்ற முறையில்தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் நிறைய இருப்பதால், இவற்றின் தரத்தையும் பரிசோதனை செய்ய வேண்டியதுமிக மிக அவசியம் என பொதுமக்களிடம் கூறுகின்றனர்.


