For Daily Alerts
Just In
மாணவனை விசிறச் செய்த தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்
சேலம்:
சேலம் அருகே ஒரு தொடக்கப் பள்ளியில் காற்றுக்காக மாணவனை விசிறச் செய்த பள்ளித் தலைமை ஆசிரியர்பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப் பட்டார்.
சேலம் அருகே தாரமங்கலம் ஒன்றியம் பாப்பம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் கி.வசந்தா சென்ற போது அங்கு ஒரு அறையில் பள்ளித் தலைமை ஆசிரியர் கே.குப்புசாமிக்கு ஒருமாணவர், அட்டையால் விசிறிக் கொண்டிருந்ததைக் கண்டார்
விசாரித்த போது குப்புசாமி அறையில் காற்றோட்டமுமுல்லை, மின்சாரமுமில்லை அதனால்தான் மாணவரை விசிறசெய்தேன் என்றார் .
குப்புசாமிக்கு விசிறிக் கொண்டிருந்தது 3 ம் வகுப்பு மாணவர். இது குறித்த விசாரணையில் தலைமை ஆசிரியரின்தவறு உறுதியானதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்ய பட்டார் என முதன்மை கல்வி அதிகாரிசெ.கார்மேகம் தெரிவித்தார்.


