For Quick Alerts
For Daily Alerts
Just In
பாக். ஏவுகணை சோதனை: அணு ஆயுதம் ஏந்தி செல்லும்
இஸ்லாமாபாத்:
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் வாயந்த, குறைந்த தூரம் சென்று தாக்கும், ஹதப்-3 ரக ஏவுகணையைபாகிஸ்தான் இன்று செலுத்தி சோதனை செய்தது.
இந்த சோதனை குறித்து இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு முன் கூட்டியே தகவல்தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு நாளை வருகை தர இருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர்ரிச்சர்ட் ஆர்மிடேஜும், இணை அமைச்சர் கிரிஸ்டினா ரோக்காவும் தங்களது பயணத்தை ஒத்தி வைத்துவிட்டனர்.
பாகிஸ்தானின் ஏவுகணை சோதனை குறித்து அறிந்தே அவர்கள் தங்கள் பயணத்தை ஒத்தி வைத்ததாகக்கூறப்படுகிறது.


