சென்னையில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்
சென்னை:
சென்னை நகரில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
மழைக் காலத்தில் குழந்தைகள் மத்தியில் அதிகம் பரவும் டெங்குக் காய்ச்சல் தற்போது சென்னை நகரில் பரவிவருகிறது.
கடுமையான தலைவலி, தொடர் காய்ச்சல், உடலில் அம்மை போன்ற புள்ளிகள், உடல் வலி, பசியின்மை, ருசிஉணரும் சக்தி குறைதல், வாந்தி போன்ற அறிகுறிகளுடன் காணப்படும் டெங்குக் காய்ச்சல் தற்போது சென்னையின்சில பகுதிகளில் பரவி வருகிறது.
எழும்பூரில் உள்ள அரசினர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஏராளமான குழந்தைகள் டெங்குக் காய்ச்சல்அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் டெங்குக் காய்ச்சலைத் தடுக்கும் முறைகள் குறித்து பிரசாரத்தைஆரம்பித்துள்ளது.
ஏடிஸ் எஜிப்டி என்ற வகை கொசுக்கள் மூலமே இந்தக் காய்ச்சல் பரவுகிறது. மேலும் சுகாதாரமில்லாத சூழல்,சுத்தமில்லாத குடிநீர், வீட்டுக்கு அருகே நீர் தேங்குவது ஆகியவை இந்த நோய்க்கு மூலகாரணங்கள்.
காய்ச்சல் வந்த 3, 4வது நாளில் உடலில் புள்ளிகள் ஏற்பட ஆரம்பிக்கும் பின்னர் அது கை, கால்கள், முக்ததுக்கும்பரவும்.
டெங்குவுக்கு சரியான தடுப்பு மருந்துகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் ஒரு வாரத்தில்தானாகவே காய்ச்சல் குறைய ஆரம்பித்துவிடும்.

