வெயிலில் வாடும் தமிழகம்: வட கிழக்குப் பருவ மழை தாமதமாகும்!
மதுரை:
இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை தொடங்குவது காலதாமதமாகலாம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால்,இதுவரை வட கிழக்குப் பருவ மழை பெய்யவில்லை. மாறாக வெயில் கொளுத்தி வருகிறது.
குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை வெயில் கொளுத்துகிறது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சிநிலைய அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை தாமதமாக தொடங்கும். இந்தஆண்டுக்குரிய தென் மேற்கு பருவ மழையும் தாமதமாகவே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
பருவ நிலையில் ஏற்படும் மாற்றங்களே மழை தள்ளிப் போவதற்குக் காரணமாகும். இருப்பினும் தமிழகத்திற்குஇந்த ஆண்டு உரிய மழைப் பொழிவு கிடைக்கும் என்றனர்.
சம்பா சாகுபடிக்கு கல்லணை திறப்பு:
இதற்கிடையே காவிரிப் பாசனத்திற்காக கல்லணை இன்று திறக்கப்பட்டது.
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை 7ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் திருச்சி கல்லணைக்கு இன்றுஅதிகாலை வந்து சேர்ந்தது.
இதைத் தொடர்ந்து கல்லணையும் திறந்துவிடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டஆட்சித் தலைவர்கள், பொதுப் பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதே போல கொள்ளிடத்தில்இருந்தும் நீர் திறக்கப்பட்டது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு 2,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கொள்ளிடத்திலிருந்து விநாடிக்கு 500கன அடி நீர்திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் மற்றும் கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை அடுத்து காவிரிப் பாசனப் பகுதிவிவசாயிகள் தங்களது சம்பா சாகுபடிக்கான விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

