For Daily Alerts
Just In
விதவையான அக்காவை காதலித்த நண்பன் வெட்டிக் கொலை
சென்னை:
அக்காவைக் காதலித்த நண்பனை வெட்டிக் கொன்றார் வாலிபர்.
சென்னை ஆயிரம் விளக்கு, வாலாஜா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது நண்பர் விஸ்வநிாதன்.சீனிவாசன் அடிக்கடி விஸ்வநாதன் வீட்டுக்கு வருவது வழக்கம்.
அப்போது விஸ்வநாதனின் விதவை சகோதரி சரளாவுக்கும், சீனிவாசனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.சரளாவைத் திருமணம் செய்து கொள்ள சீனிவாசன் விரும்பினார். ஆனால், அதை விஸ்வநாதனும் அவரதுவீட்டினரும் வீட்டினர் ஏற்கவில்லை.
மேலும் நண்பனாகப் பழகிய சீனிவாசன் தன் அக்காவை காதலித்ததால் ஆத்திரமடைந்தார் விஸ்வநாதன்.
இதையடுத்து சீனிவாசனை, நேற்று முன் தினம் திருமுல்லைவாயில் பகுதிக்கு அழைத்துச் சென்றார் விஸ்வநாதன்.அங்கு வைத்து சீனிவாசனை கண்டந்துண்டமாக வெட்டினார். சீனிவாசன் அந்த இடத்திலேயே பிணமான பின்னர்உடலை போட்டுவிட்டுத் திரும்பினார்.


