For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தைரியம் இருக்கா அய்யர்? ஜெ. சவால்

By Staff
Google Oneindia Tamil News

நாகப்பட்டனம்:

Jayalalithaa in Nagapattinam

நாகப்பட்டிணம் விழாவில் முதல்வர் ஜெயலலிதா

நாகப்பட்டிணம் விழாவில் ஜெயலலிதா பேச்சின் முழு விவரம்:

இவர்களை (காங்கிரஸ் கட்சியினர்) பொறுத்தவரை ஒரே ஒரு பிரச்சனை தான். உலகம் தொடங்கிய நாளில் இருந்து யார் தலைவர்என்பதைக் கண்டுபிடிக்க போராடிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள். அவர்களில் ஒருவர் தான் இந்த மணிசங்கர அய்யர்.

Jayalalithaa in Nagapatinam

விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை பார்வையிடும் முதல்வர் ஜெயலலிதா
மனிதருக்கு ஒரு அணுகுமுறை இருக்க வேண்டும். ஒரே ஒரு சொல் இக்க வேண்டும். எங்கே இந்தாலும் ஒரே சொல்லைப் பேசவேண்டும். ஒரே அணுகுமுறை வேண்டும். பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்போது ஒன்று பேசுவதும், மேடையில் ஒருவரைசந்திககும்போது வேறு பேச்சு பேசுவதும் கூடாது.

வாய் இருக்கிறது. நாக்கு இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக் கூடாது. கை இருக்கிறது, பேனாஇருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதிடக் கூடாது.

இதைச் சொல்கிறேன் என்பதற்காக அன்புச் சகோதரர் மணி சங்கர் அய்யர் வருத்தப்படக் கூடாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான்குருாவயூர் கோவிலுக்கு யானையை தானமாகக் கொடுத்தேன். அப்போது அய்யர் ஒரு கட்டுரை எழுதினார். நான் யா தானம்தந்ததை கிண்டல் அடித்து, ஜெயலலிதா குருவாயூர் கோவிலுக்கு ஒரு யானையை தானமாகக் கொடுத்துள்ளார். நான்ஜெயலலிதாவையே கோவிலுக்கு தானமாகக் கொடுக்க விரும்புகிறேன் என்று எழுதினார்.

அன்று அப்படி எழுதிய இந்த எம்.பி. இன்று தனது தொகுதிக்கு என்னவெல்லாமோ வேண்டும் என்று கேட்கிறார். இதுதவறில்லை. மக்களுக்காக கோரிக்கை வைக்கிறார்.

ஆனால், அன்று பத்திரிக்கையில் எழுதினாரே அதை இன்று, இந்த இடத்தில், மைக் முன் பேசத் தயாரா?. ஜெயலலிதாவைகோவிலுக்கு தானமாகத் தர விரும்புகிறேன் என்று இந்தக் கூட்டத்தின் முன் பேசத் தயாரா? (அய்யரை நோக்கி கூட்டத்தில்இருந்து அதிமுகவினர் ஆபாசமாக கத்துகின்றனர்).

என்னைப் பொறுத்தவரை எங்கும் ஒரே பேச்சுதான். இவருடைய தலைவர் (சோனியா காந்தி) குறித்து நான் முன்பு சில கருத்துக்களைத்சொன்னேன். இன்றும் அவரை என் முன் நிறுத்துங்கள். அதே கருத்தை பயப்படாமல் சொல்வேண். ஆணித்தரமாக சொல்வேன்.

வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம் அய்யர். அதை அள்ள முடியாது என்றார் ஜெயலலிதா.

ஜெவுக்கு ஜனநாயகம் தெரியாது: அய்யர்

அதிமுகவினரின் பயமுறுத்தலினால் பயந்துவிடாமல் தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாக உழைக்கப் போவதாக மணிசங்கர் ஐயர்கூறினார்.

காரைக்காலில் பாண்டிச்சேரி மாநில அரசின் பாதுகாப்புடன் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள அவர் செய்தியாளர்களிடம்பேசுகையில், ஜெயலலிதாவுக்கு மக்களாட்சி என்றால் என்ன, ஜனநாயகம் என்றால் என்ன என்று தெரியாது என்றார்.

ஆளுநரிடம் புகார் செய்ய முடிவு

காங்கிரஸ் எம்.பி. மணி சங்கர அய்யர் மீது அதிமுகவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன், அகில இந்திய செயலாளர் ஜி.கே.வாசன் ஆகியோர் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.

சோ.பாலகிருஷ்ணன் கூறுகையில், இது போன்ற வன்முறையான, அடாவடியான செயல் தமிழகத்தில் இதுவரை நடந்ததில்லை.இப்படிப்பட்ட ஒரு அராஜக ஆட்சியை மக்களும் கண்டதில்லை. இந்த வன்முறைத் தாக்குதல் குறித்து ஆளுநரிடம் புகார் அளிப்போம்.இந்த ஆட்சியில் மக்கள் பிரதிநிதிக்கே பாதுகாப்பில்லை என்பது வெட்கக் கேடான விஷயம் என்றார்.

ஜி.கே.வாசன் கூறுகையில், இந்த அராஜக போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும். வரும் தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு சரியானபாடம் கற்பிப்பார்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X