For Daily Alerts
Just In
தாறுமாறாக ஓடிய லாரி விபத்து: 4 காவலர்களுக்கு மெமோ!
சென்னை:
சென்னை சூளைமேட்டில் தாறுமாறாக ஓடிய லாரியால் அரசு ஊழியர் பரிதாபமாக இறந்த விபத்தைத் தொடர்ந்து,பணியில் அலட்சியமாக இருந்த சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு காவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி அரசு ஊழியர் சங்கர்என்பவர் இறந்தார். பெண் உள்பட 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. பல வாகனங்களும் சேதமடைந்தன.
பகல் நேரத்தில் சென்னை நகருக்குள் லாரிகள் வரக் கூடாது என்று உள்ள தடையை மீறி லாரி எப்படி வந்ததுஎன்று விசாரணை நடத்தினர். இதில் கோயம்பேடு பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்களின்அலட்சியம் (அலட்சியமா அல்லது மண்டையை சொறிந்து ஐந்தோ பத்தோ லஞ்சப் பிச்சை வாங்கினார்களா என்றுதெரியவில்லை) காரணமாகவே லாரி நகருக்குள் நுழைந்தது தெரியவந்தது.


